ஒரு எக்டருக்கு 500 – 700 கிலோ தானியம் தரும் குதிரைவாலி சாகுபடி முறை…

பயிர் மேலாண்மை: குதிரைவாலி வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டதால் மானவாரி பயிராக பயிரிடப்படுகிறது.

இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் வரை பயிரிடப்படுகிறது.

குதிரைவாலி வெப்பம் மற்றும் வெப்பம் சார்ந்த காலநிலைகளில் நன்கு வளரக்கூடியது.

குதிரைவாலி மற்ற பயிர்களை காட்டிலும் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளரக்கூடியது.

மண்:

குதிரைவாலி தண்ணீர் தேங்கிய ஆற்றுப் படுகையில் ஒரளவிற்கு வளரக்கூடியது.

இது மணல் கலந்த களிமண்நிலங்களில் நன்கு வளரக்கூடியது.

கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

நிலம் தயாரித்தல்:

இரண்டு முறை நிலத்தை கலப்பை (அ) ஹேரோ கலப்பை கொண்டு உழுது சமப்படுத்தி விதைப்படுக்கையை தயார்படுத்துதல் வேண்டும்.

விதை மற்றும் விதைப்பு செய்தல்:

குதிரைவாலி பருவமழை துவங்கிய உடன் ஜீலை மாதத்தின் முதல் பதிணைந்து நாட்களுக்கு விதைக்க வேண்டும்.

விதைகளை தெளித்தல் (அ) பார்பிடித்து 3-4 செ.மீ துளையிட்டு விதைக்கலாம்.

ஒரு எக்டேருக்கு 8 – 10 கிலோ விதை தேவைப்படும்.

வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ.மீவிடலாம்.

எரு மற்றும் உர மேலாண்மை:

ஒரு எக்டேருக்கு 5 – 10 டன்கள் தொழு உரம் இடலாம்.

தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை 40:30:50 கிலோ ஒரு எக்டேருக்கு என்ற விகிதத்தில் இடவேண்டும்.

உரம் முழுவதையும் விதை விதைப்பின்போது அளிக்க வேண்டும்.

நீர்பாசனப் பகுதிகளில் பாதியளவு தழைச்சத்தை விதைத்த 25 – 30 நாட்களுக்கு பிறகு இடலாம்.

நீர் மேலாண்மை:

பொதுவாக குதிரைவாலிக்கு நீர்பாசனம் தேவையில்லை வறன்ட சூழ்நிலை நிலவினால் ஒருமுறை நீர்பாசனம் பூங்கொத்து வரும் தருனத்தில் அளிக்க வேண்டும்.

அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்றவேண்டும்.

களை மேலாண்மை:

வயலில் விதைத்த 25 – 30 நாட்கள் வரைகளை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்

இரண்டு முறை களை எடுத்தல் போதுமானது.

கைகொத்து அல்லது சக்கர கொத்தி மூலம் களை எடுக்கலாம்.

நோய் கட்டுப்பாடு:

பூஞ்சாண காளாண் நோய்:

இது ஓரு பூஞ்சாண காளாண் நோயாகும் .பாதிக்கப்பட்ட செடியினை பிடுங்கி எறிவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

விதைகளை ஆரோக்கியமான செடிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

கரிப்பூட்டை நோய்:

இதுவும் ஓரு வகை பூஞ்சாண காளாண் நோயாகும்.

இதனை விதை நேர்த்தி மூலம் அக்ரோசன் 2.5 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

சுடுதண்ணீரில் நனைத்தும் (55 செல்சியஸ் 7 – 12 நிமிடங்களில்) விதைக்கலாம்.

துரு நோய் :

இதுவும் ஓரு வகை பூஞ்சாண காளாண் நோயாகும். டைத்தேன் எம்-45 2 கிலோவை 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பூச்சி கட்டுப்பாடு

தண்டு துளைப்பான்:

திமெட் குருணை 15 கிலோ ஒரு ஹெக்டருக்கு என்ற விகிதத்தில் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை மற்றும் கதிரடித்தல்:

வயல் அறுவடைக்கு தயாரானவுடன் அரிவாள் கொண்டு அறுத்து வயலில் அடுக்கி வைக்கப்பட வேண்டும்.

கதிர்களை காளைகளின் கால்களில் போட்டு நசுக்கி தானியங்களைப் பிரித்தெடுக்கலாம்.

மகசூல்:

சராசரியாக ஒரு எக்டருக்கு 500 – 700 கிலோ தானியமும், 1200 கிலோ வைக்கோலும் கிடைக்கும்.

மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகளால் 10 – 12 குவிண்டால் வரை தானிய மகசூல் பெறலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories