உர மேலாண்மை:
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தொழுஉரம் இட்டால் செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் வேரில் விடவேண்டும். அதாவது பாசன நீரில் கலந்து விட்டால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.
வளர்ச்சி ஊக்கிகள்:
கிழங்குகள் நல்ல முறையில் உருவாக நட்ட மீன் அமிலம், பஞ்சகாவ்யா கரைசலை வளர்ச்சி ஊக்கியாக 15 நாட்கள் இடைவெளியில் ஐந்து முறை தெளிக்க வேண்டும்.
மகரந்த சேர்க்கை:
ஒவ்வொரு செடியிலும் 75 முதல் 150 பூக்கள் விரிகின்ற சமயம் தன் மகரந்த சேர்க்கை மிகவும் குறைவான அளவில் இருப்பதாலும் காய்களின் உற்பத்தி குறைந்துவிடும். இதற்குஅயல் மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும்.
பூக்கள் விரிந்து மகரந்தம் வெளிப்படும் சமயத்தில்10-15 சென்டிமீட்டர் நீளமாக மெல்லிய குச்சிகளை எடுத்து அவற்றின் நுனியில் சிறிது பஞ்சால் தொடும் போது மகரந்தம் பஞ்சின் மீது ஒட்டிக் கொள்ளும். இதனை கொடிகளில் உள்ள மற்ற பூக்களின் சூல் பகுதியின் மீது தொட்டு அயல் மகரந்த சேர்க்கையும் ஏற்படுத்தலாம்.
தினமும் காலை நேரங்களில் இவ்வாறு அயல் மகரந்த சேர்க்கை செய்து அதிக அளவு காய் மகசூலை பெறலாம்.
பச்சை பொருள் தாக்குதல்:
பச்சைப் தாக்குதலை கட்டுப்படுத்த இஞ்சி. பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் கிழங்குகள் எடுக்க ஆரம்பிக்கும் போதும் 21 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
அழுகல் நோய்:
அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கையும், ஜீவாமிர்த கரைசலையும் தெளித்து வரலாம்.
இலைக்கருகல் நோய்:
இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தவேப்ப கொட்டைக்கரைசலை தெளித்து வரலாம்.
அறுவடை
:
கிழங்கு முளைத்து 160 முதல் 180 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம்.
விளைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம்பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறி, காய்களின் தோல் சுருங்கி விடும். இந்த தருணத்தில் காய்களை பறிக்க வேண்டும்.
காய்களை 10 முதல் 15 நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். ஒவ்வொரு காயிலும் 70 முதல் 100 விதைகள் இருக்கும்.
மகசூல்:
ஒரு ஏக்கரில் ஒரு ஆண்டில் 700 முதல் 750 கிலோ விதைகளும், 300 கிலோ கிழங்குகளும் மகசூலாக கிடைக்கும்.