கம்பு சாகுபடி; வளரியல்பு முதல் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் வரை ஒரு அலசல்…

வளரியல்பு:

ஆண்டுதோறும் வளரக்கூடியவை.

பூக்கும் பருவம்:

மலர்கள் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை பூக்கும்.

காய்க்கும் பருவம்:

கனிகள் அக்டோபர் முதல் நவம்பர் வரை காய்க்கும்.

பரவியிருக்குமிடம் : பயிரிடக்கூடியவை. வட மற்றும் கிழக்கு சீனா போன்ற நாடுகளில் காணப்படும்.

கழைகள்:

கழைகள் திடமானது, 3 மீட்டர் உயரமானது, நெருக்கமானது. கணுக்கள் மொசுமொசுப்பானது, மஞ்சரி கீழ்ப்புறத்தில் இருக்கும்.

இலைகள்:

இலை உறைகள் தளர்வானது, வழவழப்பானது; ஏறத்தாழ 20-100X2-5 செ.மீ நீளமானது, இரு மேற்பரப்புகள் மற்றும் விளிம்புகள் சுணையுடையது; அடிப்பகுதி இதய வடிவமானது; இலை உறைச்செதில் சுமார் 2-3 மி.மீ நீளமுடையது.

மஞ்சரி:

நேரானது முதல் அகலமானது, நீள்வட்ட வடிவமானது, நெருக்கமானது, ஏறக்குறைய 40-50X1.5-2.5 செ.மீ நீளமுடையது; அச்சு நெருக்கமானது. மொசுமொசுப்பானது, பூவடிச் செதிலின் மேலுறை உதிர்ந்து (விழுந்து) விடாமல் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கும்,

1-9 பூங்கிளைகள் சூழ்ந்திருக்கும், கூடை வடிவுடைய காம்பு சுணையானது, சுமார் 1-25 மி.மீ நீளமுடையது; பூங்கிளைகளில் ஊசி, போன்ற உரோமங்கள் வழக்கமாகக் குறுகியவை, வழுவழுப்பானது, நெருக்கமானது. இறகு போன்றது.

மலர்கள் : சிறு காம்பிலிகள் தலைகீழ் முட்டை வடிவமானது, சுமார் 3.5-4.5 மி.மீ நீளமானது; கீழ்ப்பகுதி உமிச்செதில் நுண்ணியவை, சுமார் 1 மி.மீ. நீளமானது; மேல்மட்ட உமிச்செதில் சுமார் 1.5-2 மி.மீ நீளமுடையது, 3-நரம்புகள்; ஆண் மலர் கீழ் உமி சுமார் 2.5 மி.மீ நீளமுடையது.

5-நரம்புகள், விளிம்புகள் சவ்வு போன்றவை மற்றும் விளிம்பில் முடிகளைக் கொண்டது, மேல் உமி நுண் தளிர் சுணை மற்றும் மெல்லிய தாள் போன்றது; மேல்மட்ட கீழ் உமி 5-7 நரம்புகள், மெல்லிய தாள் போன்றது, நுண் தளிர் சுணை, விளிம்பில் முடிகளைக் கொண்டது,

முனை நுனி மழுங்கியது; மகரந்தப்பைகளுடன் ஒரு குறுகிய முடிகள் முனையில் கொண்டது..

இரகங்கள்:

உள்ளுறைக் கம்பு, கீழ்த்திசைக் கம்பு, சிறுமலர்காம்பு கம்பு, சுருள்முடிக் கம்பு, நரம்புக் கம்பு, நரிவால் கம்பு, நாட்டுக் கம்பு, பலவீனக் கம்பு, பிரிந்த கம்பு, முன்ஜா கம்பு ஆகியவை உள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories