காய்கறி பயிரான சீமை வெள்ளரிக்கு ஜெர்கின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த தாவரமானது குக்கர் பிட்டேசியே குடும்ப வகையை சார்ந்தது. இந்த தாவரத்தின் பாகமானது பலவகையான மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த காய்கறி சாகுபடி குறித்து இங்கு காணலாம்.
காய்கறி பயிரான சீமை வெள்ளரி மற்ற காய்கள் போலதான் சாகுபடி செய்ய வேண்டும்.
சீமை வெள்ளரி அனைத்துவித மண் வகைகளிலும் வளரும் தன்மை கொண்டது. அதிலும் குறிப்பாக வண்டல்மண் பகுதிகளில் கார அமிலத்தன்மை 6.0 முதல் 6.8 ஆக இருத்தல் வேண்டும்.
சீமை வெள்ளரிக்கு மிகவும் உகந்தது ரகமானது அட்ரஸ் ஆகும்.
சீமை வெள்ளரி சாகுபடி மிதமான வெப்பம் இருந்தாலே போதும்.மேலும் இந்த சூழ்நிலையில் அதிக வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும்.
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம், மண்புழு உரம் இட்டு ஒரு மீட்டர் இடைவெளியில் பார்சல் அமைக்க வேண்டும்.
ஒரு எக்கடருக்கு 800 கிராம் விதை தேவை.ஒரு ஏக்கருக்கு 300 கிராம் விதை தேவைப்படும். முதலில் விதைகளை டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
நடவு செய்த செடிகளுக்கு பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம் போன்ற இயற்கை உரங்களை இட்டு நன்கு பராமரிப்பு செய்ய வேண்டும். மேலும் நடவு செய்த 25-ம் நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். அதில் களைகள் இருப்பினும் இயற்கை களைக் கொல்லிகளை தெளித்து விட வேண்டும்.
இதில் பூச்சித்தாக்குதல் இருக்கும். அதாவது வெள்ளை ஈ , அஸ்வினி , இலைப்பேன் போன்றவை தாக்கும். இந்த இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் தெளித்து விட வேண்டும்.
விதைத்த 90வது நாளில் 10 முதல் 12 டன் காயிகளை ஒரு எக்டரில் இருந்து அறுவடை செய்யலாம்.