கிணறு வெட்ட உதவிபுரியும் தொழில்நுட்பங்கள்

தேங்காய்
ஒரு தேங்காயை எடுத்து குடுமி மட்டும் உள்ளவாறு உரித்து எல் வடிவில் உங்கள் உள்ளங்கையில் தேங்காயை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

அப்போது எங்கு பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறது அந்தப் பகுதிக்கு தேங்காயை கொண்டு சென்றால் தேங்காயின் குடுமிப் 90 டிகிரி வானத்தை நோக்கி இருக்கும். இப்படி 90 டிகிரியில் தேங்காய் குடுமி இருந்தால் அங்குதான் தண்ணீர் இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

நாவல் மரம்

கிணறு வெட்ட வேண்டிய இடத்தில் சுமார் 15 அடி ஆழத்தில் கிழக்கு திசையில் 5 அடி தூரத்தில் இருக்கும்.

அத்திமரம்

அத்தி மரம் உள்ள இடங்களில் தண்ணீர் இருக்கும் .பொதுவாக கிணறு தோண்டுவதற்கு ஊற்றுகள் கண்டறிவதற்கும் இடம் நிர்ணயிப்பது அத்திமரத்தின் பக்கத்தில்தான் .அதிக ஆழம் தோன்டுவதற்கு முன்னரே இந்த மரத்தின் அருகில் நீர் கிடைத்துவிடும்.

நல்ல நீரை கண்டறியும் முறை

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சேர்த்த அடையாளங்கள் இருக்கும் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் நல்ல நீர் கிடைக்கும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories