கீழாநெல்லி தாவரம் ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும் செடி முழுவதும் மருத்துவ பயன்பாடு உடையதாகும் இதுவும் வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தைச் சேர்ந்த சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் ஓராண்டுத் தாவரமாகும்.
கீழாநெல்லி நவ்யாகிறிட் ரகம்தான் ஏற்றது இது 7.5 6.5 கார அமிலத்தன்மை மற்றும் நல்ல வழிகள் தன்மை கொண்ட மணல் கலந்த பசலை அல்லது களி மண்ணில் நன்கு வளரும்.
ஒரு எக்டருக்கு நாற்றுகளை தயாரிக்க ஒரு கிலோ விதை தேவைப்படும் விதைகளை ஒரு வாரத்திலும் துளிர்விடும் அவற்றையும் 20 நாட்கள் வரை பராமரிக்க வேண்டும் மேலும் முளைப்புத் திறனை அதிகரிக்கிறது விதைப்பதற்கு முன் நல்லதண்ணி விதைகளை 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு ஜீவாமிர்தம் கரைசல் நனைத்து நடவு செய்ய வேண்டும் மூன்று முதல் நான்கு வாரம் வயதுடைய நாற்றுகளை 1ox15 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும் எக்கடருக்கு 8 லட்சம் நாற்றுகள் தேவைப்படும்.
தாவர வளர்ச்சியை ஊக்குவிக்க தொழுவுரம் மண்புழு உரம் போடவேண்டும்.
மேலும் வேப்பம்புண்ணாக்கு கொடுத்து வரலாம் செடிகளுக்கு பஞ்சகாவியா ஜீவாமிர்தம் போன்றவற்றை தெளித்து விடுவதன் மூலம் பூச்சித் தாக்குதலை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.
பொதுவாக இந்த மூலிகை தாவரத்திற்கு பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முயற்சிகள் அதிகம் தேவையில்லை.
பயிர்களை ஜூன் முதல் ஜூலை வரை பயிரிட்டால் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் செப்டம்பர்முதல் அக்டோபர் அறுவடையாகும் உயர்ந்த கீழாநெல்லியின் உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது நடவிற்கு 80 முதல் 100 நாட்களில் தாவரங்கள் அதிகபட்சமாக வளர்கின்றன இதன் இலைகளில் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என முதலில் அழைக்கப்படுகின்றது பிறகு பேச்சுவாக்கில் கீட்காநெல்லி ,கீழ்வாய் நெல்லி,கீழாநெல்லி என தற்போது அழைக்கப்படுகிறது.