குதிரைவாலி பயிர் இடுவது எப்படி

 

கோ 1 ,கோ 2 ஆகிய ரகங்கள் உள்ளன.

பருவம்

மானாவாரியாக பயிரிட செப்டம்பர் அக்டோபர் மாதங்கள் ஏற்றது .பாசன பயிராக பயிரிட பிப்ரவரி மார்ச் மாதங்கள் ஏற்றது.

மண்

குதிரைவாலி தண்ணீர் தேங்காத ஆற்றுப்படுகையில் ஓரளவிற்கு வளரக்கூடியது. இது மணல் கலந்த களிமண் நிலங்களில் நன்கு வளரக்கூடியது .கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

நிலம் தயாரித்தல்

கோடையில் நிலத்தை இரண்டு முறை கலப்பையைக் கொண்டு உழுது பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். கடைசி உழவின்போது தொழுஉரம் அல்லது ஆட்டுக்கிடை உரமும் போட்டு நிலத்தை ஊட்டம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும் .பாசன பயிராக இருந்தால் பயிராக இருந்தால் தேவையான அளவில் பார் அதில் அமைக்க வேண்டும்.

விதை அளவு

ஒரு எக்டருக்கு 8 முதல் 10 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைத்தல்

விதைகளை அளித்தல் அல்லது தயார் செய்துள்ள பார்களில் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் துளையிட்டு விதைக்கலாம். விதைக்கும் போது வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 சென்டி மீட்டர் விட வேண்டும்.

நீர் நிர்வாகம்

பொதுவாக குதிரைவாலி நீர் பாசனம் தேவையில்லை .வறண்ட சூழ்நிலை நிலவினால் பூங்கொத்தும் வரும் தருணத்தில் ஒரு முறை நீர்ப்பாசனம் அளிக்கவேண்டும். அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்ற வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories