கேரட் சாகுபடி

 

 

பருவம்
மலைப் பகுதிகளுக்கு பிப்ரவரி ஜூலை மாதம் பயிரிட ஏற்றது .சமவெளிப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் ஏற்றது.

கேரட் சாகுபடி செய்வதற்கு செம்மண் மிகவும் உகந்தது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.0-7.0 வரை இருக்க வேண்டும்.

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது பயன்படுத்த வேண்டும். ஒரு எக்டருக்கு அடியுரமாக 30 டன் தொழு உரத்தை மண்ணுடன் கலக்க வேண்டும். பிறகு 90 கிலோ ,தழைச்சத்து 90 கிலோ, மணிச்சத்து 90 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். இதனுடன் 25 கிலோ சல்ஃபேட் இட வேண்டும்.

ஒரு எக்டருக்கு 4 கிலோ விதைகள் தேவைப்படும்.

மலைப்பகுதியில் தேவையான அளவுக்கு நீள, அகலம் உள்ள மேட்டுப் பாத்திகள் அமைத்து விதைக்க வேண்டும். சமவெளிப் பகுதியில் பார் பிடித்து 5 சென்டி மீட்டர் இடைவெளியில் விட்டு விதைகளை விதைக்கவேண்டும். விதைகளை விதைக்கும் போது ஒரு பங்குக்கு நான்கு பங்கு மணல் கலந்து விதைக்க வேண்டும். விதைகள் விதைத்து 15 நாட்கள் கழித்து குழிக்கு வளமாக ஒரு செடி விட்டு மீதியை கலைத்துவிட வேண்டும்.

விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் .அதன் பிறகு 5 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories