உரங்கள்
ஒரு எக்டருக்கு தழை ,மணி மற்றும் சாம்பல் சத்துகளை60:30:30 விகிதத்தில் விட வேண்டும்.
அடியுரமாக மணி சாம்பல் சத்துக்களை முழுமையாக இட வேண்டும். தழைச்சத்தை மட்டும் பாதி அளவை எட்டும் மீதமுள்ளவற்றை சரிபாதியாக இருபத்திமூன்று, 30, 40 நாட்களில் இடவேண்டும்.
பயன்கள்
இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது .இது இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. தினமும் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமாகும்.
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால் எலும்புகள் வலுப்படும். மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமை ஆவதற்கான கால்சியம் இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.
நீரிழிவு நோய்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோய்களின் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
கேழ்வரகில்லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால் கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும் .மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.
ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளும்.