ரகங்கள்
கோ 1,கோ 2,கோ 3,கோ 4, ஜி ஏ யூ 1,யூ டி 2,யூ டி 20 யூ டி 21 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
ஜூன் ஜூலை மற்றும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் பயிரிட ஏற்றது.
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள இரு பாட்டுநிலம் பயிரிட மிகவும் ஏற்றது. மண்ணின் அமில காரத் தன்மை 6 முதல் 8 வரை இருக்க வேண்டும் . ஈரமான கரிசல்மண் ஏற்றது . இந்த நிலை வெப்பநிலை சராசரியாக 20 முதல் 25 செல்சியஸ் இருந்தால் பயிர் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
நிலம் தயாரித்தல்
இதை இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்த வேண்டும். இறவைப் பயிராக இருந்தால் நீர் பாய்ச்சும் தன்மைக்கேற்ப பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதை அளவு
ஒரு ஏக்கருக்கு இறவையில் பயிரிட10- 12 கிலோ மானாவாரியாக பயிரிட 20 முதல் 25 கிலோ விதைகள் தேவைப்படும் கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும் உடைக்காமல் முழு விதைகளை நடவு செய்தால் விதை முளைக்காது
விதை நேர்த்தி
மானாவாரி பயிராக இருந்தால் விதைகளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் பொட்டாசியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் கலந்த கரைசலில் 16 மணி நேரம் ஊற வைத்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தால் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.
விதைத்தல்
விதைப்பான் மூலம் விதைகளை 20×15 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைகள் 8 முதல் 15 நாட்களுக்கு முலை த்துவிடும் மானாவாரி சாகுபடியில் விதைகளைத் தூவும் முறையில் விதைத்து நாட்டுக் கலப்பை கொண்டு மூடிவிட வேண்டும்.
நீர் நிர்வாகம்
இறவைப் பயிராக இருந்தாலும் விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும் .அதன் பிறகு 7-10நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.