கொத்தவரங்காய் பயிரிடுவது எப்படி

 

ஜூன் ஜூலை அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும்.

மண்
நல்ல வடிகால் வசதியுடைய மணற்பாங்கான செம்மண் அல்லது வண்டல் மண் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 வரை இருக்கவேண்டும். உவர் நிலங்களில் வளரும் தன்மை உடையது.

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பிறகு பார்சல்களை 45 சென்டிமீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும்.

விதை அளவு
ஒரு எக்டருக்கு 10 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

விதை நேர்த்தி
ஆறிய அரிசி கஞ்சியில் 60 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவை கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். விதைக்கும் முன்பு 15 முதல் 30 நிமிடம் வரை நிழலில் உலர்த்த வேண்டும்.

விதைத்தல்
விதை நேர்த்தி செய்த விதைகளை பார்களின் பக்கவாட்டில் 15 சென்டிமீட்டர் இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்த உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். பிறகு மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories