உர மேலாண்மை:
அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியம் நுண்ணுயிரி கலவையை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு மண் அணைத்து நீர் பாய்ச்சுவது மிகவும் அவசியம்.
விதைகளின் மூலம் பரவும் நோய்களான வேர் அழுகல் நோய், வாடல் நோய்ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை, ஜீவாமிர்தக் கரைசலையும் தெளித்து வந்தால் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
வாடல் நோயைக் கட்டுப்படுத்த பஞ்சகாவ்யா கரைசல் தெளித்து வந்தால் இந்த நோயிலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.
களை நிர்வாகம்:
களைகள் முளைக்கும் முன் விதைத்த 3 நாட்களில் களை எடுக்க வேண்டும். பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.
அறுவடை:
விதைத்த 60 நாட்களுக்குப் பிறகு வயலில் மடக்கி உழவேண்டும். விதை பயிராலான 150 நாட்களுக்கு பிறகு விதை அறுவடை செய்யலாம்.
பயிரிடுவதன் பயன்:
வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.
களைகள் மற்றும் தீமை செய்யும் புழுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
இப்பயிரின் இலையில் 2.42 சதவீதம் தழைச்சத்து உள்ளது. இப்பெயர்கள் பயிர்கள் வேகமாக வளர்ந்து ஒரு எக்டரில் 15 முதல் 25 டன் பசுந்தாள் உற்பத்தி தருவதோடு, மண்ணில் ஒரு எக்டருக்கு 75 முதல் 85 கிலோ வரை தழைச்சத்தை அதிகரிக்கிறது.
இத்தகைய குணங்களை கொண்டுள்ளதால் பசுந்தாள் பயிர்கள் விதைகள் அதிக அளவில் தேவைப்படுகிறது.
வறட்சி காலங்களில் பசுந்தாள் உரப்பயிர் பயிரிட்டு விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம்.
மண்வளம் காப்பதில் பசுந்தாலில் முதன்மையானது கொழிஞ்சி, இதற்கான விதையை நாமே தயார் செய்யலாம்.
பசுந்தாள் உரப் பயிர்களான கொழிஞ்சி , சணப்பு, தக்கைப் தக்கைப்பூண்டு, மணிலா,அகத்தி, நரிப்பயறு மற்றும் சித்தகத்தி
ஆகியவை மண்ணின் ஈரப்பதத்தை நிலை நிறுத்தவும், கார, அமிலத்தன்மையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மண் அரிமாணத்தில் இருந்து தடுக்கவும், ஊட்டச்சத்துகளை மண்ணில் நிலை நிறுத்தி மண்வளத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.