பருத்திக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பயன்பாடுகளுக்கு இருப்பதும்
சணல் தான். அத்தகைய சணல் சாகுபடி பற்றி இங்கு காணலாம்,
ஒளிடோரியல் சனல் ஜே ஆர் ஓ 524, 878, 7835 கேப்சுலாரிஸ் சணல் ஜெ ஆர் சி 212, 321, 7447 ஆகிய ரகங்கள்
சணல் சாகுபடிக்கு ஏற்றவை. சணல் பயிரிட ஏற்ற மாதங்கள் மாசி – வைகாசி ஏற்ற பருவமாகும்.
மணல் கலந்த வண்டல் மண் மற்றும் களிமண் வகை மண் வகைகள் சணல் சாகுபடிக்கு ஏற்றது. கேப்சுலாரிஸ் சணல் வகை நீர் தேங்கும் நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. ஒளிடோரியல் சனல் வகை நீர் தேங்கும் பகுதிகளில் வளரும் தன்மை அற்றது.
விதைகளை விதை நேர்த்தி செய்ய ஜீவாமிர்த கரைசலில் ஊறவைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதால் விதைகளின் மூலம் பரவும் நோய்கள் தடுக்கப்படுகிறது இரண்டு ரகங்களும் விதைக்கும் முறையானது மாறுபடுகிறது .ஒளிடோரியல் ரகங்களுக்கு 25 x 5 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.கேப்சுலாரிஸ் ரகங்களுக்கு 30 x 5 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது தொழு உரம், மண்புழு உரம் ,வேப்பம் பட்டை தூள் ஆகியவற்றைப் போட்டு நன்கு உழுது நிலத்தைச் சீர்படுத்தி கொண்டு பிறகு விதைக்க வேண்டும்.
விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும் விதைகளின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை ஜீவாமிர்தக் கரைசலையும் பஞ்சகாவ்யா கரைசல் ஆகியவற்ற தெளித்து வரலாம். பிறகு பயிர் வளர்ந்து 20 நாட்களில் களை எடுக்க வேண்டும் பிறகு ஒரு வாரம் இடைவெளியில் களை எடுக்கலாம்.
சணல் விதைத்த 4 மாதங்களில் அறுவடைக்கு வரும். செஅறுவடை செ ய்யப்பட்ட செடிகள் வயலில் 3 முதல் 4 நாள் பரப்பப்பட்டு இலைகளை உதிர்த்து வைக்க வேண்டும் அதன் பிறகு தனித்தனியாக பிரிக்கப்பட்டு கத்தைகளாக கட்டவேண்டும்.