சவுக்கு சாகுபடி செய்யும் விதம்……

சவுக்கு சாகுபடிக்காக தேர்வு செய்யும் நிலத்தை ஐந்து மாதங்கள் காயப்போட வேண்டும். பிறகு ஏக்கருக்கு இரண்டு டன் அளவில் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி, எட்டு சால் உழவு செய்ய வேண்டும்.

பிறகு, 3 அடி இடைவெளியில் இரண்டு அங்குல அளவுக்கு குழி எடுத்து சவுக்குக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 4 ஆயிரத்து 800 கன்றுகள் வரை நட முடியும்.

நடவு செய்து ஓர் ஆண்டு வரை பத்து நாள்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும் அதன்பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது.

நிலத்தில், களைகளை மண்ட விடக்கூடாது. ஆண்டுக்கு, இரண்டு முறை கவாத்து செய்ய வேண்டும்.

ஒன்றரை ஆண்டிலிருந்து விற்பனை வாய்ப்பைப் பொறுத்து மரங்களை வெட்டி விற்பனை செய்யலாம்.

ஐந்து வயது வரை வளர்ந்த மரங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மொத்த அறுவடையும் முடிந்த பிறகு நிலத்தை சுத்தப்படுத்தி, மீண்டும் 5 மாதங்கள் காய விட்டு புது நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

சவுக்குக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து விட்டால், பாசனத்துக்காக வேலையாட்கள் தேவைப்படமாட்டார்கள்.

தண்ணீர்ச் செலவையும் குறைக்க முடியும். களைகளும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories