சாகுபடி செய்த சூபா புல்லை எப்போது அறுவடை செய்யணும் தெரியுமா?…

சூபா புல் அல்லது சௌண்டல் அல்லது கூபா புல்

** பருவ நிலைக்கேற்ற பயிர் செய்யப்படும் சூபா புல் ரகங்கள் உள்ளன

** ஜூன்- ஜூலை மாதம் – ஹவாயன் ஜெயண்ட்- (ஐவரி கோஸ்ட்), கோ 1

** மானவாரி ரகம் (செப்டம்பர்- அக்டோபர்), கே 8, ஜெயண்ட் இல்பில் – இல்பில், கோ 1

** சூபா புல்லை நட்டு 6 மாதம் கழித்து அறுவடை செய்யலாம். எனினும் முதல் அறுவடை மரத்தின் அடிப்பகுதி 3 செமீ அளவிற்கு தடிமனாகிய பின்பு அல்லது மரம் ஒரு முறை காய் வைத்து விதைகளை உற்பத்தி செய்த பின்னரே முதல் அறுவடை செய்யவேண்டும்

** முதல் அறுவடைக்குப் பின்பு 40-80 நாட்களுக்கு ஒரு முறை மரத்தின் வளர்ச்சி மற்றும் பருவ நிலையினைப் பொருத்து அறுவடை செய்யலாம்

** வறட்சியான பகுதிகளில், மரத்தினை இரண்டு வருடம் வரை வளர விட்டு, அதன் வேர்ப்பகுதி நன்றாக ஆழமாக ஊன்றிய பின்னரே அறுவடை செய்யவேண்டும்

** மண்ணிலிருந்து 90-100 செமீ உயரம் விட்டு மரத்தை வெட்டவேண்டும்

** நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு ஹெக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினை உற்பத்தி செய்யும்

** மழை பெய்யும் நேரங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 40 டன்கள் வரை பசுந்தீவன உற்பத்தியினை மரத்தின் 2ம் வருட வயதிலிருந்து பெறலாம். மேலும் சூபா புல் மரத்தினை 100 செமீ உயரம் வரை விட்டு கவாத்து செய்யலாம்.

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories