சாத்துக்குடி பயிர் இடுவது எப்படி

 

 

ரகங்கள்

ரங்காபுரி, நாட்டு வகைகள் ஆகியவை சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.

மண்

தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் செம்மண் கலந்த சரளை மண் நிலம் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.

நிலம் தயார் தயாரித்தல்

சாகுபடிக்கும் தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது 20 அடிக்கு 20 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள அகல ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை கலந்து விட்ட 15 நாட்கள் ஆறப்போட வேண்டும்.

விதை
குருத்து ஓட்டு செய்த செடிகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.

விதைத்தல்

நாற்றின் ஓட்டு பகுதி தரைக்கு மேலே அரை அடி உயரத்தில் இருப்பது போல நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க வேண்டும் நீளமான குச்சியை கூன்றி செடிகளுடன்இணைத்துக் கட்ட வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் கட்ட வேண்டும். செடியின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உரங்கள்

இயற்கை உரமாக ஒரு எக்டருக்கு எரு 3oo கிலோ, மண்புழு உரம் 100 கிலோ ,வேப்பம் புண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவை தலா 20 கிலோ இவற்றை ஒன்றாகக் கலந்ததும் ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மழைக் காலத்திற்கு முன்பாக கொடுக்க வேண்டும்.

ஐந்து வயது மரங்களுக்கு 3 அடி இடைவெளியிலும்,அதற்கு மேல் வயதுள்ள மரத்தில் 5 அடி இடைவெளியிலும், 2அடி அங்குலத்திற்கு வட்டப்பாதையில் எடுத்து வட்டப்பாத்தி எடுத்துவிடும் மேற்கண்ட கலவையை ஒவ்வொரு மரத்துக்கும் 10 கிலோ அளவுக்கு வைக்க வேண்டும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாசனத் தண்ணீரோடு 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து விடலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories