சின்ன வெங்காயம் சாகுபடி முறை

அக்டோபர் நவம்பர் மாதம் ஏற்ற பருவமாகும்.

மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 7க்குள் இருக்கவேண்டும். தண்ணீர் தேங்காத செம்மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 முதலில் மூன்று முறை உழுது கடைசி உழவின்போது ஒரு எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரம் இடவேண்டும். பிறகு 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து நிலத்தைத் தயார் செய்ய வேண்டும்.

விதை அளவு

ஒருஎக்டருக்கு விதை வெங்காயம் 1500 கிலோ தேவைப்படும்.

விதைத்தல்

விதை வெங்காயத்தை பத்து சென்டிமீட்டர் இடைவெளியில் பார் பாத்திகளில் இருபுறங்களிலும் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதை வெங்காயம் நட்ட பிறகு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்று நாள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் .அதன் பிறகு 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சினால் போதும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories