பருவம்
சித்திரை ஆடி மார்கழி மாசிப் பட்டம் ஏற்ற பருவமாகும் இதனால் இதைஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.
மண்
நல்ல மண்ணும் மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்டவையாகும். பாட்டு நிலம் ,செம்மண் நிலம் உகந்தது .அதிக ஈரம் கொண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும்.
விதை அளவு
ஒரு எக்டருக்கு சாகுபடி செய்ய 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் கலந்து பரவலாக உழவு செய்து மண்ணை சமன் படுத்தி கொள்ள வேண்டும்.பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். அப்பொழுதுதான் விதைகள் கீழே விழுந்து முளைக்கும் .பிறகு கைகளால் கிலரி பாசனம் செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
இக்கீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பார்த்தி எப்போதும் ஈரமாக இருக்கவேண்டும். நிழல் பகுதியாக இருக்கக் கூடாது .அதிக வெளிச்சம் தேவைப்படும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
உரங்கள்
ஜீவாமிர்தக் கரைசலை 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இதனால் கீரையின் வளர்ச்சி சீராக இருக்கும்.
பயன்கள்
குடல் ,இதயம், மூளை, ரத்தம், இவைகளுக்கு நல்ல வலிமையை தரும்.
கீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் நீங்கும்.
சிறுகீரை உடலுக்கு அழகையும் முகத்திற்குப் பொலிவையும் தரவில்லை வரும் தரும்.