சூரியகாந்தியில் விதை பிடிப்பு தன்மையை எப்படி அதிகரிக்கலாம்?

 

மகரந்த சேர்க்கை ஏற்படும் நேரமான காலை 9 மணி முதல் 11 மணி வரை மெல்லிய துணி கொண்டு பூவின் மேல் பாகத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை லேசாக தேய்க்க வேண்டும்.

மேலும் பூ முகங்களை ஒன்றோடு ஒன்று தேய்ப்பதன் மூலம் ஏக்கருக்கு 5 தேனீ பெட்டிகளை வைத்து மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்க செய்யலாம்.

வாழையில் சுழ்ச்சி முறையில் என்னென்ன பயிர்களைப் பயிர் செய்யலாம்?

வாழையில் பச்சை பயறு, உளுந்து, சோயாமொச்சை ,கொள்ளு ,அவரை ,நிலக்கடலை போன்ற பயிறு வகைகளை சுழற்சிமுறையில் பயிரிடுவதால் உரங்களின் அளவையும் குறைத்து மகசூலை அதிகரிக்கலாம்.

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வாழை சாகுபடி செய்வதை விட ,வாழை -மக்காச்சோளம் என்ற சுழற்சிமுறையில் பயிரிடுவதால் அதிக மகசூல் பெற முடியும்.

நெல் பயிரிட உள்ள வயலில் கோரையை எப்படி கட்டுப்படுத்தலாம்?

பாசன நீர் வசதியுள்ள நிலங்களில் சேற்று உழவு செய்து நெல் பயிர் பயிரிடுவைத்தால் கூரை களைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.

கோரையை கட்டுப்படுத்த உழவு செய்யும்போது விதைப்பு செய்யும்போதும், வயலில் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.

முக்கிய கிழங்கு வகை பயிர்கள் என்னென்ன என்ன?

கிழங்கு வகை பயிர்கள் (Tuber Crops( முக்கிய துணை உணவுப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் சர்க்கரை சத்து ,புரதச்சத்து ,மாவுச்சத்து ,தாது சத்துக்கள்,மற்றும் வைட்டமின்களும் அதிக அளவில் அடங்கியுள்ளன.

சக்கரவள்ளி கிழங்கு ,மரவள்ளிக் கிழங்கு ,சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கொடி வள்ளி கிழங்கு ,கருணை கிழங்கு, சிறு கிழங்கு மற்றும் உருளைக் கிழங்கு போன்றவை முக்கிய கிழங்கு வகை பயிர்கள் ஆகும்.

கரவை மாடுகளில் கொழுப்பற்ற திடப் பொருளை அதிகரிக்க எந்த வகையான தீவனங்களை அளிக்கலாம்?

ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்பு தீவனம் கொடுப்பது மற்றும் கலப்பு தீவனத்தில் மாவுச் சத்துக்களின் அளவை அதிகரிக்கும் நிலையில் பாலில் கொழுப்பற்ற திட பொருள்களின் அளவு அதிகரிக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories