பருவம்
செடிமுருங்கை சாகுபடி செய்ய நவம்பர் டிசம்பர் மாதங்கள் மிகவும் ஏற்றது.
மண்
செடி முருங்கை எல்லா மண் வகைகளிலும் வளரும் .எனினும் மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது .மண்ணின் கார அமிலத்தன்மை ஆறு முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.
ரகங்கள்
பிகே எம் 1,ரகங்கள் பிகேஎம் 2 ஆகிய ரகங்களை நடவு செய்யலாம்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது பிறகு 2.5 மீட்டர் இடைவெளியில் 45x 45x 45 சென்டிமீட்டர் நீளம் ,அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும். கொடிகளை ஒரு வாரம் ஆறப்போட்டு பிறகு நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும்.
விதை
செடி முருங்கை விதை மூலம் நடவு செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை போதுமானது.
விதைத்தல்
குழிகளின் மத்தியில் மூன்று சென்டிமீட்டர் ஆழத்தில் விதைகளை விதைக்கவேண்டும் .குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
குழிகளை சுற்றியும் 60 சென்டிமீட்டர் நீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் அமைக்க வேண்டும். விதைத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் விதைகள் முளைக்கும். விதைக்கும் போது நீர்ப்பாய்ச்சவேண்டும். திறந்து விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.