செடிமுருங்கை சாகுபடி

பருவம்

செடி முருங்கை சாகுபடி செய்ய நவம்பர் டிசம்பர் மாதங்கள் மிகவும் ஏற்றது

மண்

செடி முருங்கை எல்லா மண் வகைகளிலும் வளரும் எனினும் மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது மண்ணில் கார அமிலத்தன்மை ஆறு முதல் 7.5 வரை இருக்கவேண்டும்

ரகங்கள்

பிகேஎம் 1 கேஎம் 1 ஆகிய ரகங்கள் நடவு செய்யலாம்

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பிறகு 2.2 மீட்டர் இடைவெளியில் 45:45:45 சென்டி மீட்டர் நீளம் அகலம் ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும் குழிகளை ஒரு வாரம் ஆறப்போட்டு பிறகு நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும்

விதை

செடி முருங்கை விதை மூலம் நடவு செய்யப்படுகிறது ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை போதுமானது

விதைத்தல்

குழிகளின் மத்தியில் மூன்று சென்டிமீட்டர் ஆழத்தில் விதைகளை விதைக்க வேண்டும் ஒரு குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைக்க வேண்டும்

நீர் நிர்வாகம்

குழிகளை சுற்றி 60 சென்டி மீட்டர் அகலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் அமைக்க வேண்டும் விதைத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் விதைக்கும் போது நீர்ப்பாய்ச்சவேண்டும் பிறகு விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர்ப் பாய்ச்சவேண்டும் பிறகு மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories