சௌ சௌ பயிர் இடுவது எப்படி

 

பச்சை காய் வகை மற்றும் வெள்ளை காய் வகை என இரு ரகங்கள் உள்ளன.

பருவம்

மலைப்பிரதேச பகுதிகளுக்குஏப்ரல் மே மாதமும், சமவெளிப் பகுதிகளுக்கு ஜூலை ஆகஸ்ட் மாதம் ஏற்ற பருவங்கள் ஆகும்.

மண்

நல்ல வடிகால் வசதியுடைய ஈரத்தன்மையை தக்க தக்கவைத்துக்கொள்ளும் குணம் நிறைந்த களிமண், செம்மண் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 இருந்தால் பயிர் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும் .சௌசௌ அதிக வெப்ப நிலை கடலோரப் பகுதிகளிலும் குளிர்ச்சியான மலைப் பகுதிகளிலும் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு முதல் மூன்று முறை உழுது பயன்படுத்த வேண்டும். பிறகு 45 சென்டிமீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் 2.5×1.8 மீட்டர் என்ற இடைவெளியில் எடுக்க வேண்டும். 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் ,250 கிராம் யூரியா, 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் உரங்களை மேல் மண்ணுடன் நன்கு கலந்துவிட்டு குழிகளை மூடவேண்டும்.

விதை

முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. காய்கள் கொடியில் இருக்கும்போது அதன் உள்ளே இருக்கும் விதை முளைத்து விடுகிறது. குருத்து 13 சென்டிமீட்டர் முதல் 15 சென்டிமீட்டர் வரை வளர்ந்தவுடன் நடவு செய்ய உபயோகப்படுத்தலாம். இதைத் தவிர தண்டின் வெட்டு துண்டுகளையும் நடவிற்கு பயன்படுத்தலாம்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் நன்கு முற்றிய முளைவிட்ட காய்களை குழிக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும் .பிறகு சமவெளிப் பகுதிகளுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். மலைப் பகுதிகளுக்கு நீர் பாசனம் அதிகம் தேவைப்படாது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories