திணை பயிர் இடுவது எப்படி

மண்

செம்மண் இ ருமண் கலந்த மண் வகைகள் சாகுபடிக்கு சிறந்தது.

நிலம் தயாரிப்பு
கோடை மழையைப் பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பிறகு நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மழைநீர் சேகரிப்புசெய்ய படுகிறது. கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படும் அடியுரமாக தொழு உரம் இட்டு உழவு செய்யவும்.

விதை அளவு

தினை விதையை வரிசையாக விதைத்தால் ஒரு எக்டருக்கு 10 கிலோ தேவைப்படும் .விதையைத் தூவினால் ஒரு எக்டருக்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி

ஒரு எக்டருக்கு தேவையான விதை மற்றும் 600 கிராம் அரிசி கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும் .நேரடியாக நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு எக்டருக்கு 2 கிலோ பார்சல் 25 கிலோ மணல் 25 கிலோ தொழு உரம் கலந்து நிலத்தில் தூவ வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் கொடுக்க வேண்டும். மானாவாரி என்றால் நிலத்தில் ஈரம் இருக்கும்போது விதைக்க வேண்டும்.3 நாட்களில் முளைப்பு எடுக்கும் .அதன் பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டினால் போதுமானது. இது வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories