திராட்சை சாகுபடி

திராட்சை சாகுபடி
திராட்சை விவசாயம் செய்ய ஜூன் – ஜூலை மாதத்தில் திராட்சை நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும் நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலமாக இருந்தால் நல்லது.
தேர்வு செய்த நிலத்தினை நன்கு உழுது சமன் படுத்த வேண்டும். பின் அதில் பன்னீர் ரகங்களுக்கு குழிகளை ௦.6 மீட்டர் அகலம், ௦.6 மீட்டர் ஆழம், 3 மீட்டர் இடைவெளியில் குழி தோண்ட வேண்டும்.
மற்ற ரகங்களுக்கு 1 x 1 x 1 மீட்டர் அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். குழிகளில் நன்கு மக்கிய உரம் அல்லது குப்பைகள் அல்லது பசுந்தழை உரம் கொண்டு நிரப்பி ஆற விட வேண்டும்.
அல்லது.
நன்கு மக்கிய தொழுவுரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ்பாக்டீரியா. 5 கிலோதம் ஒவ்வொன்றிலும் எடுத்து அவற்றை 100கிலோ மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரத்தில் கலந்து நன்கு தண்ணீர் தெளித்து பிரட்டி ஒரு வாரம் வரை நிழலில் வைத்திருந்து பிறகு குழிக்கு தேவையான அளவு போட வேண்டும்.
ஜீன், ஜீலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை
. தயார் செய்துள்ள குழிகளில் குழியின் மையப்பகுதியில் நடவு செய்யவேண்டும்.
பன்னீர் திராட்சையை 3 x 2 மீட்டர் இடைவெளியிலும், மற்ற ரகங்களை 4 x 3 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.
செடிகள் நட்ட உடனே நீர் பாய்ச்ச வேண்டும். அடுத்ததாக மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதைத் தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் நீர் பாய்ச்ச வேண்டும்.
கவாத்து செய்ய வேண்டும் என்றாலும், அறுவடை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு 15 நாட்களுக்கு முன் நீ பாய்ச்சுவதை நிறுத்திவிட வேடும்.
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்
கொடி வளர்ப்பும் கவாத்து செய்தல்
நடவு செய்த செடி வளர வளர அதை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வரவேண்டும்.
பின்னர் நுனியைக் கிள்ளி விடவேண்டும்.
பக்கக் கிளைகளை எதிரெதிர் திசைகளில் பரவவிடவேண்டும்.
அதம் கிளைகளையும் மேலும் மேலும் கிள்ளிவிட்டு, திராட்சைக் கொடியை பந்தல் முழவதும் படரச் செய்ய வேண்டும்.
பொதுவாக நான்கு மொட்டு என்ற நிலையில் கவாத்து செய்வார்கள். அது எந்த ரக திராட்சை என்பதைப் பொறுத்து இரண்டு மொட்டு நிலையிலும் கவாத்து செய்வது உண்டு.
அதேபோல், கோடைக்காலப் பயிராக இருந்தால் டிசம்பர் அல்லது ஜனவரியிலும், மழைக்காலப் பயிராக இருந்தால் மே அல்லது ஜீனில் கவாத்து செய்ய வேண்டும்.
தொழுஉரம், பசுந்தாழ் உரம், தழைச்சத்து, மணிசத்து, சாம்பல் சத்து போன்ற உரங்களை ரகங்களுக்கு ஏற்ப இடவேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது,
பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர வகைசெய்ய வேண்டும். அதற்கு நுனியை அவ்வபோது வெட்டி விடுவது அவசியம். தாய்க் கொடியையும் பக்கவாட்டில் வளரும் கொடிகளின் நுனியையும் 12 முதல் 15 மொட்டுகள் விட்டே வெட்ட வேண்டும்.
அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ள கொடியாக இருந்தால், அதனை பந்தல் உடன் சேர்த்து கட்டவேண்டும்.
மாதமொருமுறை ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழுஉரம் வைத்து தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பதினால் நல்ல விளைச்சல் பெறலாம்.
பூச்சி தாக்குதல்
வண்டுகள், இலைப் பேன்கள், மாவு பூச்சுகள் தண்டு துளைப்பான்கள் போன்ற பூச்சுகளை கட்டுப்படுத்த இயற்க்கை முறை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்.
பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருந்தால் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாய ஆய்வாளர்கள் ஆலோசனைப் படி செய்வது நல்லது.
பழங்கள் சீராகப் பழுக்க 0.2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு (ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம்) பழம் விட்ட 20-வது நாளிலும் 40-வது நாளிலும் தெளிக்க வேண்டும்.
பன்னீர் திராட்சையாக இருந்தால் ஒரு வருடத்திற்க்கு ஏக்கருக்கு 30 டன் கிடைக்கும்.
அதுவே பச்சை திராட்சையாக இருந்தால் 40 டன் வரை கிடைக்கும்.
மற்றபடி விதையில்லாத ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள் என்றால் முறையே 15, 20 டன் வரை கிடைக்கும்.
திராட்சையின் பயன்கள்:
திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது. இது சக்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்பொழுது நல்ல சக்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
கர்பப்பை கோளாறு உள்ள பெண்கள் திராட்சை பலத்தை எடுத்துக்கொண்டால் கர்பப்பை சம்மந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும்.
இதயத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இதய ரத்த குலை அடைப்பு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
புற்றுநோய் செல்களை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது.
உடலில் உள்ள கெட்ட நீர்,வாயு,சளி,குடல் கழிவுகள்,உப்புகள் ஆகியவற்றை கரைத்து வெளியேற்றும் தன்மை உடையது.
உலர்ந்த திராட்சையும் பல நன்மைகளை கொண்டுள்ளது. திராட்சையை தவிர்க்காமல் சாப்பிடலாம்
.
ஒரு முறை நடவு செய்தாலே தொடர்ந்து 10 வருடம் வரை வைத்திருக்கலாம்.
வளர்க்கும் பக்குவத்தை பொறுத்து 3 மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்
அதிக பயன் இருப்பதால் இவற்றை சாகுபடி செய்து நல்ல வருவாய் பெற முன்வருவோம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories