தசகாவ்யா கரைசலை வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் சூடோமோனஸ் கலந்து மாதமிருமுறை தடுக்கலாம்.
கற்பூர கரைசல் அல்லது மீன் அமில கரைசலைத் தெளிப்பதன் மூலம் துலக்கமல்லியை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறையில் விதை நேர்த்தி எப்படி செய்யலாம்?
200 கிராம் சூடோமோனஸ் உரத்தை 200 மில்லி ஆரிய கஞ்சியுடன் கலந்து ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் நன்கு கிளறிவிட்டு 30 இடங்கள் நிழலிலுலர்த்திபின்னர் விதைக்கலாம்.
பயி ருக்கு ஏற்ப அசோஸ்பைரில்லம் அல்லது ரைசோபியம் நுண்ணுயிர்களை பாஸ்போர்ட் பாக்டீரியா உடன் கலந்து இடுவது நல்லது.
செடிகளுக்கு கிடைக்கும் மணிச்சத்தின் பயன்பாடுகள் என்ன?
தாவரங்களின் திசுக்கள் ,வேர்கள் செழித்து வளரவும் பயிர்களின் இன பெருக்கத்திற்கும் தரமான தானிய மகசூல் மற்றும் தழைச்சத்தினை பாஸ்போர்ட் பாக்டீரியா நுண் உயிரானது பயிருக்கு கிடைக்காத மற்றும் மண்ணில் கரையாத நிலையிலும் உள்ள மணிசத்தினை அங்கக அமில திரவங்களை சுரந்து அவற்றில்
கரைய வைத்து பயிர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் நிலைக்கு மாற்றுகின்றது.
உயிர் உரம் இடுவதன் மூலம் ப யிருடன் மணிச்சத்து எளிதாக கிடைக்க வழிவகை செய்து மகசூலை அதிகரித்து கொடுக்கிறது.
புஞ்சை நிலத்தில் என்னென்ன பயிர்களை பயிரிடலாம்?
புஞ்சை சாகுபடிக்கு உரிய நிலத்தில் இலக்கணம் நிலக்கடலை, சோளம், துவரை, ஆமணக்கு, உளுந்து மூலிகைகள் ,முருங்கை சாகுபடி செய்யலாம். தண்ணீர் கிடைக்கும் சமயத்தில் மல்பெரி சாகுபடி செய்யலாம்.
கோழிப்பண்ணை மற்ற பண்ணையை விட எவ்வகையில் சிறந்தது?
மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். குறைந்த வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி வருவதால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே வருமானத்தைப் பெற முடிகிறது.