துவரை சாகுபடியில் விதை நேர்த்தி செய்ய இந்த முறைகளை பயன்படுத்தலாம்…

துவரை முக்கிய பயறு வகைகளில் ஒன்று. இதனை ஏழையின் மாமிசம் என்பார்கள். இதில் 25-25 சதவீதம் புரதச்சத்து உள்ளது. துவரை வறட்சி தாங்கி, எல்லா மண்ணிலும் வளரக்கூடிய பயிர். இதன்வேர் முடிச்சுகள் காற்றில் உள்ள தழைச் சத்தை மண்ணில் நிலை நிறுத்தி, மண் வளத்தை பாதுகாக்கிறது.

அறுவடைக்கு பிறகு இதன் தட்டைகள் எரிபொருளாகவும் பயன்படுகிறது. 150-180 நாட்கள் வரையுள்ள நீண்ட கால ரகம் (வம்பன், எஸ்ஏ-1, கோ6), 120-140 நாட்கள் வரையுள்ள மத்திய காலரகம் (கோ1, கோ2, கோ3, கோ4, கோ5), 100-110 நாட்கள் வரையுள்ள குறுகிய கால ரகங்கள் (வம்பன் 1, 2) ஆண்டுகள் பலன்தரும் பல்லாண்டு ரகம் (பி.எஸ்.ஆர்1) ஆகிய நான்கு ரகங்கள் உள்ளன.

ஆடி பட்டம் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. நீண்ட கால ரகங்களை ஆடிப்பட்டத்தை தவிர மற்ற பட்டங்களில் பயிரிடக் கூடாது. குறுகிய கால ரகங்களை இறவையிலும், ஆடி,புரட்டாசி மற்றும் கோடை பருவத்திலும் விதைக்கலாம்.

செம்மண் நிலம் துவரை சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. கோடை உழவு செய்வது அவசியம். நிலத்தை நன்கு புழுதி வரும்வரை உழ வேண்டும். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 5டன் நன்கு மக்கிய தொழுஉரம் அல்லது ஒரு டன் மண் புழு உரம் இட வேண்டும். அமிலத்தன்மையுள்ள நிலங்களுக்கு ஊட்ட மேற்றிய தொழு உரம் இடுவதன் மூலம் அமிலத்தன்மையை நிவர்த்தி செய்யலாம்.

நீண்ட கால ரகங்களுக்கு தனிப்பயிராக இருந்தால் ஏக்கருக்கு 4 கிலோவும், ஊடுபயிராக இருந்தால் ஏக்கருக்கு 2கிலோவும் விதைகள் தேவைப்படும். மத்திய கால மற்றும் குறுகிய கால ரகங்களுக்கு தனிப்பயிராக இருந்தால் ஏக்கருக்கு 10 கிலோவும், ஊடுபயிராக இருந்தால் ஏக்கருக்கு 5 கிலோவும் விதைகள் தேவை. சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் முளைப்பு திறன் கூடுவதோடு, பூச்சி நோய்த் தாக்குதலைத் தடுக்க முடியும்.

விதை நேர்த்தி:

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் பூசனக்கொல்லி மருந்து கலந்து, 24 மணி நேரத்துக்கு பிறகு ரைசோபியம் நுண்ணுயிரிகளால் விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை ஒரு பாக்கெட் ரைசோபியம் கலவையுடன் அரிசி கஞ்சியையும் சேர்த்து 15 நிமிடம் நிழலில் உலர வைக்க வேண்டும். நுண்ணுயிர் கலந்த விதைகளை தாமதம் செய்யாமல் உடன் விதைக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories