தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம்!

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில், உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாமிட்டுள்ளனர். இவர்கள் இப்பகுதியில் உள்ள விவசாயிகளை நேரடியாக சந்தித்து விவசாயம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். வேளாண் கல்லூரி மாணவர்களின் இந்த செயல் விளக்கப் பயிற்சி, அனைத்து விவசாயிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்னையில் வேரூட்டம்
வேளாண் மாணவர்களின் இந்த செயல் விளக்கப் பயிற்சியில், தென்னையின் வேரூட்டம் (Coconut root) குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தென்னை மரங்களில் நோய்களை கட்டுப்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் (High Yield) தென்னையில் வேரூட்டம் செய்வது அவசியமானது. ஒரு மரத்திற்கு வேரூட்டம் டானிக் 200 மில்லி வீதம் வருடத்திற்கு இரண்டு முறை செலுத்த வேண்டும் என்று மாணவிகள் தெரிவித்தனர். இதன் மூலம் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தென்னை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு (Awareness) அதிகரிக்கும். அதோடு, தென்னையில் வேரூட்டம் செய்து, மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் தெளிவாக அறிந்து கொண்டனர் என்றார்.

வண்ண ஒட்டு பொறிகள்
இதே போல் செல்லம்பட்டி ஒன்றியம், ஜோதிமாணிக்கத்தில் வண்ண ஒட்டு பொறிகளின் பயன்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. இதில் வேளாண் கல்லூரி மாணவிகள் அமல் பிரிசில்லா, பிந்தியா, பிரியதர்ஷினி, ஹீர விலாஷினி ஆகியோர் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து ஏக்கருக்கு 5 மஞ்சள் மற்றும் நீலவண்ண அட்டை ஒட்டும் பொறிகளை வயல்களில் பயன்படுத்தும் முறையை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். இம்முறையைப் பயன்படுத்தினால், பூச்சிகளின் தாக்குதல் குறைந்து மகசூல் (Yield) அதிகரிக்கும் மற்றும்

விழிப்புணர்வு:
வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவும், நோய்க்கட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் பல்வேறு பயிற்சிகளை (Training) செயல் விளக்கத்துடன் அளித்து வருகின்றனர். விவசாயிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பயிற்சி பெறுகின்றனர். நோய்க்கட்டுப்பாடு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கூடுதல் வருமானம் பெறும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். சரியான விழிப்புணர்வு (Awareness) தான் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories