தேக்கு மரம் சாகுபடி!

உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும். இதன் அறிவியல் பெயர் டெக்டோனா கிராண்டிஸ் ஆகும்.

தேக்கு மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், மண் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள் செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி நிலங்களிலும் நன்கு வளரும்.

தேக்கு மரத்தின் சிறப்பியல்புகள்:

தேக்கு மரம் இலையுதிர் மரவகையைச் சேர்ந்தது. நவம்பர் முதல் ஜனவரி வரை இலையுதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றி காணப்படும். இம்மரம் நல்ல வலிமை உடையது.

இம்மரம் ஒளி விரும்பி ஆகும். நல்ல சூரியஒளி கிடைத்தால் தான் இம்மரம் நல்ல முறையில் வளரும்.

தேக்கு மரத்தில் பெட்ரோல் என்னும் பினால் சாறு உள்ளது. இது தண்டு அழுகல் மற்றும் கரையான் அரிப்பைத் தடுத்து விடுகிறது.

தேக்கின் அமைப்பு:

இதன் இலைகள் அகலமாகவும், கொத்துக் கொத்தாக பூக்கள் மற்றும் காய்களை கொண்டதாகவும் விளங்குகிறது.

20 வயதுடைய மரத்திலிருந்து சராசரியாக ஒரு மரத்திற்கு 10 கிலோ தேக்கு விதைகள் கிடைக்கும். ஒரு கிலோவிற்கு சராசரியாக 1300 விதைகள் இருக்கும்.

தேக்கு மரத்தின் பயன்பாடுகள்:

மரச்சாமான்கள் செய்தல், சன்னல், கதவுகள் செய்தல், கட்டிலில் செய்தல்,கப்பல் கட்டுமானம் மற்றும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தேக்கு மரம் பயன்படுகிறது.

மரக்கட்டையின் கடினத் தன்மை காரணமாக தேக்கு மரம் மரங்களின் அரசன் என்று சிறப்பிக்கப்படுகிறது.

வாழையைப் போலவே உணவு சாப்பிடுவதற்கும் இதன் இலைகளை பயன்படுத்துவதும் வழக்கமும் உள்ளது.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories