பொதுவாக பல வகையான மரங்கள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.அதில் சில மரங்கள் பொருளாதாரத்தையே அதிகரிக்க மிகவும் உதவும் அத்தகைய மரத்தில் ஒன்றுதான் மூங்கில். அப்படிப்பட்ட மூங்கில் சாகுபடி குறித்து இங்கு காணலாம்.
மூலிகை பயிர்கள் கார அமிலத் தன்மை 5.5 முதல் 8 வரை உள்ள வடிகால் வசதி கொண்ட மண் வகைகளில் மூங்கில் வளர்க்கலாம். வண்டல் மண்,படுகை நிலங்கள் வண்டல் மண் கலந்த களிமண் மணற்பாங்கான நிலங்களில் வளரும்.
மூங்கிலில் பூக்கும் மூங்கில் பூக்கா மூங்கில் என இரண்டு வகைகள் உண்டு.முள் உள்ள மூங்கில் வகைகளை விதை மூலம் நாற்றுக்கள் ஆக உருவாக்கலாம் முள்ளில்லா மூங்கில் களை விதையில்லா இனப்பெருக்கம் முறை மூலம் நாற்றுகளை உருவாக்கலாம். மூங்கில் கழிகள் மற்றும் பக்க கிளைகளை முளைக்க வைத்து நாற்றுகள் உருவாக்கலாம்.
நிலத்தை நன்கு உழுது, பருவ மழைக்கு முன் 1மீ x 1மீ x 1மீ அளவுள்ள குழிகளை தோண்டி அதனுள் மட்கிய தொழுவுரம் இட்டு கன்றுகளை நடவேண்டும்.
நீர் பாய்ச்சும்போது கோடைகாலமாக இருந்தால் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும் ஆனால் மழைக் காலத்தில் மட்டும் நீர் தேங்காதவாறு வடிகால் அமைக்க வேண்டும்.
நடவு செய்த இரண்டாம் ஆண்டிலிருந்து கழிகளின் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சியை பொருத்து தூர் ஒன்றுக்கு 15 லிருந்து 20 கிலோ மக்கிய தொழு உரம் இட்டு மூடி விட வேண்டும் இதனால் கழி களில் எண்ணிக்கை மற்றும் பருமன் பெரிதாகும் மேலும் மூங்கில் இலைகளை மக்க வைத்தும் இ டலாம் மூங்கில் தூர்களை முறையாக பராமரிக்க வேண்டும் முள் உள்ள ரகங்களில் கழிகள் ஒன்று முதல் இரண்டு வளர்ந்த பிறகு பக்க கிளைகள் வளர்ச்சி அடையாமல் இருந்தால் நீக்கிவிடவேண்டும் மண்ணரிப்பு ஏற்படும் பகுதிகளில் மூங்கில் தூர்களுக்கு அரை அடிக்கு மண் அணைக்க வேண்டும்.
மூங்கிலை பெரும்பாலும் பூச்சிகள் நோய்கள் தாக்குவதில்லை இருப்பினும் கரையான் வெள்ளைப்புழுக்கள் தாக்கும் வாய்ப்பு உள்ளது இதற்கு வேப்பம் புண்ணாக்கை பயன்படுத்தி தடுக்கலாம்.
நடவு செய்து நான்கு ஆண்டுகளில் பயிர் அறுவடைக்கு தயாராகி விடும். மூங்கில் கூம்பு வெட்டி எடுப்பதால் குறைந்த சேதாரம் அதிக மகசூல் கிடைக்கும்.மூங்கில் அறுவடையை நான்காம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ஒரு முறை செய்யலாம்.