நாம் பூச்சிகளையும் புரிந்து கொண்டால் பூச்சிகள் நமக்கு தொல்லையாக இருக்காது அதிலும் அவை பயிர்களை தாக்கினால் இயற்கை வழி முறைகளை கையாண்டால் மிகவும் சிறப்பு தான். அந்த இன்று நிலக்கடலை பூச்சித்தாக்குதல் தடுக்க என்ன செய்யலாம்.
ஆமணக்கு பூச்சிகளுக்கு பிடித்தது என்று கூறலாம் அந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியை தான் நாடும் ஆமணக்குச் செடிகளை வயலில் ஓரத்தில் நடவு செய்யலாம் எண்ணிக்கை குறைவாகவே நடவு செய்ய வேண்டும் ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து தீமை செய்யும் பூச்சிகளை கண்டால் பூச்சிகளை சேகரித்து அழித்துவிடவேண்டும் அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது நெருக்கமாக இருக்கக் கூடாது வயலில் நடுவிலும் இருக்கக்கூடாது.
தட்டை செடி களை வரப்பு ஓரங்களில் அல்லது ஊடு பயிராக நடவு செய்யலாம் இவை பூச்சிகளை வளர்ப்பதற்கு ஏற்ற செடிகள் இந்த செடியை நோக்கி வந்த உடன் அதை உண்ண பொறி வண்டுகள் மற்றும் பல நன்மை செய்யும் பூச்சிகள் வளரும்.
மக்காச்சோளம் இரை விழுங்கிகள் அதிகம் தங்கியிருக்கும் இதை வரத்தை சுற்றியோ அல்லது ஊடுபயிராக பயிர் செய்யும் போது நிறைய இரை விழுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பயிரைத் தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கின்றன மேலும் மக்காச்சோளம் பறவைகள் உட்காருவதற்கு உதவியாக இருக்கும் பூச்சி விழுங்கி பறவைகள் மீது அமர்ந்து பயிரைத் தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளை பிடித்து உண்ணும்.
செடிகள் பூக்கும் தருணத்தில் இரண்டாவது களை எடுத்து மண் அணைக்க வேண்டும் மன் அணைப்பதன் அதன்மூலம் அதிகமாக காய்கள் கிடைக்கும் பாசனத்தின் போது இயற்கை இடுபொருட்கள் ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா அல்லது மீன் கரைசல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வருவதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.