விதை நேர்த்தி:
நடவிற்கு முன் நேர்த்தி செய்யாவிட்டால் நோனி விதைகள் ஆறுமுதல் 12 மாதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருக்கும்.
விதையின் கடினமாக மேல்தோலை நீக்குவதன் விதையின் முளைப்பு காலத்தை குறைக்கலாம் மற்றும் விதையின் முளைப்பு விகிதத்தை அதிகரிக்கலாம்.
விதைகள் வேர் விடும் திறனை அதிகரிக்க அவற்றை அசோஸ்பைரில்லம்எனும் உர கரைசலில் நனைத்து நடவு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் விதை நேர்த்தி செய்ய அமிர்த கரைசலில் விதைகளை 15 நிமிடங்கள் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
விதைத்தல்:
நிலத்தில் ஒரு மீ அகலம் 15 சென்டிமீட்டர் உயரம் தேவையான அளவு நீளமும் கொண்ட மேட்டுப் பகுதிகள் தயாரிக்க வேண்டும்.
விதைகளை 15 சென்டி மீட்டர் இடைவெளியிலும் விதைக்கு விதை 10 சென்டி மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்:
விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு வளர்ச்சி காலத்தில் 7 முதல் எட்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
முதிர்ச்சி அடையும்போது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
களை நிர்வாகம்:
நடவு செய்த 14 நாட்கள் வரை களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
களைகள் அதிகமாக வளர்வது தடுக்க இயற்கை களை கொல்லிகளை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு முறை கவாத்து செய்த பின்னர் களை எடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை:
இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த நடவு செய்த 30வது நாளில் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.
வெட்டு புழுக்களை கட்டுப்படுத்த பயிரின் தண்டுப் பகுதியில் வேப்பிலை கரைசலை மாலை நேரங்களில் ஊற்றவேண்டும்.
சாம்பல் நோயை கட்டுப்படுத்த கற்பூர கரைசல் தெளித்து வரவேண்டும்.
வேப்பம் புண்ணாக்கு, ஜீவா கரைசலைத் தெளித்து வந்தால் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.
வெண்நுனி இலை, நூற்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த பஞ்சகாவ்யா கரைசலை பயன்படுத்த வேண்டும்.
அறுவடை:
பழங்கள் வெள்ளை நிறமாக மாறும் போது அல்லது நன்கு பழுத்த பின் அறுவடை செய்ய வேண்டும்
மகசூல்:
மரம் 3வது ஆண்டு முதல் மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும் மற்றும் 5 வருடங்களிலிருந்து தொடர்ச்சியாக மகசூல் கொடுக்கும்.