மண்
செம்மண் பூமியிலும் ,களிமண் பூமியிலும் வளரும். இதற்கு குளிர்ந்த வானிலை தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 3 அல்லது 4 தடவை மடக்கி உழவேண்டும். கடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும் .பிறகு 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.
விதை
ஒரு எக்டருக்கு 100 கிலோ விதை போதுமானது.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு இரண்டு கிலோ பாஸ்போபாக்டீரியா மண்ணுடன் கலக்க வேண்டும்.
விதைத்தல்
பார்களின் பக்கவாட்டில் விதைகளை முப்பத்தி நான்கு சென்டிமீட்டர் ஆழத்தில் ஊன்ற வேண்டும். விதைக்கு விதை பத்து சென்டிமீட்டர் இடைவெளி விட்டுவிதையை ஊன்ற வேண்டும். விதைத்தவுடன் ஒரு தண்ணீரும் பிறகு மூன்று நாள் கழித்து உயிர்த் தண்ணீர் விடவேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.