பச்சோலி சாகுபடி!

விவசாயத்தில் நறுமணப் பயிர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அத்தகைய பயிர்களை சாகுபடி செய்தால் அதிக லாபம் பெற முடியும். அந்தவகையில் நறுமணப் பயிர்களில் ஒன்றான பச்சோலி சாகுபடி பற்றி இங்கு காணலாம்.

பச்சோலியில் ஜோகோர் , சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ரகங்கள் உள்ளன.

பச்சோலி சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுடைய இரும்பொறை மண் சிறந்ததாகும். மேலும் வெப்ப மண்டலங்களில் ரப்பர், தென்னை மற்றும் காப்பி தோட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.

இதை பதினைந்து முதல் இருபது சென்டிமீட்டர் நீளம் உடைய வேர்விட்ட குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். ஏப்ரல்- மே மாதங்களில் சாகுபடி செய்யலாம் .நிலத்தில் கடைசி உழவின்போது ஒரு எக்டருக்கு 15 டன் தொழு உரம் இட்டு 60 சென்டி மீட்டர் இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும் .அதன்பிறகு வேர்விட்ட குச்சிகள் 30 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மேலும் மண்புழு உரம் இடவேண்டும்.

நடவு செய்த நாளிலிருந்து செடிகளுக்கும் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமிர்த கரைசல் போன்றவற்றை தெளிக்கலாம். மலைப்பகுதிகளில் பச்சோலி மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. சமவெளிப் பகுதிகளில் 7 முதல் 10 நாட்களில் நீர் பாசனம் செய்ய வேண்டும் .வளரும் பருவத்தில் ஓரிரு முறை களை எடுத்தல் வேண்டும்.

நூர் புழுக்களை கட்டுப்படுத்த ஜீவாமிர்தம் பீஜாமிர்தம் கரைசலைத் தெளித்து விடலாம். இந்த கரைசலை நடவு செய்யும் முன்பே தெளிக்கவேண்டும். அதிகமாக பூச்சித்தாக்குதல் இருந்தால் இஞ்சி ,பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளித்து விடலாம்.

முதல் அறுவடை ஆறு முதல் எட்டு மாதங்களிலும், அதன் பிறகு மூன்று முதல் ஐந்து மாதங்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம் .அறுவடை செய்த இலைகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories