பட்டாணி சாகுபடி ( பகுதி 2)

 

நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் உரங்கள் கலை நிர்வாகம் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு அறுவடை மகசூல் போன்றவற்றை இங்கு காரணம் காணலாம்.

உரங்கள்

விதைத்த ஒரு மாதத்தில் செடிகளை கொத்திவிட்டு மேலுரமாக கற்பூரகரைசல் ஒவ்வொரு குழிக்கும் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

மேலும் வாரம் ஒருமுறை பஞ்சகாவ்யாவை கலந்து தெளித்து வந்தால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைக்கும் முன்பு டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும் .பிறகு பாஸ்போபாக்டீரியா மண்ணுடன் கலக்க வேண்டும்.

களை நிர்வாகம்

விதைத்த இரண்டு வாரம் கழித்து களை எடுக்க வேண்டும் அல்லது ஒரு மாத இடைவெளியிலும் களை எடுக்கலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

சாம்பல் நோய்

பட்டாணி சாம்பல் நோய் தாக்குகின்றன. இதனாலே\ பசுமை தன்மையை இழந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கிறது .இந்த நோய் கட்டுப்படுத்த கற்பூரகரைசல் தெளித்து வந்தால் நோயை கட்டுப்படுத்தலாம்.

காய்த்துளைப்பான்

காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறி வைக்க வேண்டும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளக்கு எரிக்க வேண்டும். இதனால் தாய்ப் பூச்சிகள் விளக்குப்பொறி ஆக கவரப்பட்ட சிக்கி இறந்துவிடும் .மேலும் இனக்கவர்ச்சி பொறியை வைக்க வேண்டும்.

அசுவினி பூச்சி

அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் தெளித்து வரலாம்.

அறுவடை

விதைத்த 75 நாட்களில் பட்டானீ அறுவடை செய்யலாம் பட்டாணி பயறு முற்றிய உடன் அறுவடையை தொடங்கவேண்டும்.

மகசூல்

பட்டாணி 3 மாதங்களில் 10 டன்கள் வரை மகசூல் பெறலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories