பந்தலில் பெரிய பாகற்காயை விளைவித்தால் நீங்களும் பெரிய ஆளுதான்…

வெள்ளரி செடியை தரையில் படரவிடுவர். ஒட்டுரக வெள்ளரி செடியை கொடியில் வளரவிடும் பழக்கம் விவசாயிகளிடையே பரவி வருகிறது. இதன் மூலம் குறுகிய இடத்தில் அதிக செடிகளை வளர்க்க முடிகிறது.

இதே பாணியில் திராட்சையை விளைவிப்பது போல் பந்தலில் பெரிய பாகற்காய்களை விளைவிக்கலாம்.

வாடிப்பட்டி பகுதியில் நெல், கரும்பு விவசாயம் அமோகம். எனினும் மாற்று விவசாயமாக பந்தல் பாகற்காய் விவசாயத்தில் கவனம் செலுத்தலாம்.

பந்தல் பாகற்காய் விவசாயத்தில் லாபம் பெறுவது எப்படி?

“யு.எஸ்.575′ ஒட்டுரக பெரிய பாகற்காய் விதை 50 கிராம் ரூ.350. 50 சென்ட் நிலத்தில் பந்தல் அமைத்து பெரிய பாகற்காய் விவசாயம் செய்ய ரூ.18 ஆயிரம் செலவாகும். தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.3000 மானியம் பெற்றுக் கொள்ளலாம்.

சின்னப்பாகற்காய் உற்பத்தி குறைவாகவும், விலை அதிகமாகவும் இருக்கும். பெரிய பாகற்காயில் உற்பத்தி அதிகமாகவும், விலை குறைவாகவும் இருக்கும். இரண்டிலும் சமச்சீர் சத்துக்கள் உள்ளன. கூடுதலாகவோ, குறைவாகவோ இல்லை.

கால்நடைகள் வளர்த்தால் அடி உரத்திற்கு பஞ்சம் இருக்காது. கூடுதலாக காம்பளக்ஸ், பொட்டாஷ் உரம் வைக்க வேண்டும்.

காய் ஒன்று 350 முதல் 550 கிராம் வரை எடையுடன் வளரும். ஐந்து நாட்களுக்கு ஒருமுறை காய்கள் பறிக்கலாம். 30 கிலோ கொண்டது ஒரு சிப்பம்.

ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நான்கைந்து சிப்பம் எடையில் காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ ரூ.20 விலையில் உள்ளது. அவ்வப்போது விலை கூடும். குறையும்.

பாகற்காயின் சுவை கசப்பு. காய்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இனிப்பாக இருக்கும்.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories