பப்பாளி சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மேற்கொள்வது எப்படி?…

இரகங்கள்: கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7 மற்றும் கூர்க்கனிடியூ மற்றும் சூரியா இவற்றுள் கோ.2, கோ.5 மற்றும் கொ.6 பப்பெயின் எடுப்பதற்கும், உண்பதற்கும் உகந்தது. கோ.3, கோ.7 இருபால் இரகங்கள்.

ண் மற்றும் தட்பவெப்பநிலை:

பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் பூமி சாகுபடி செய்ய உகந்ததல்ல. சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் சற்றே வெப்பம் அதிகமாக நிலவும் இடங்களில் நன்குவளரும். மலைப் பகுதிகளில் சுமார் 1200 மீட்டர் உயரம் வரை வளரும்.

நல்ல வடிகால் வசதி இருப்பதன் மூலம் தண்டுப் பகுதியில் ஏற்படும் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

பருவம்:

வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் மிகவம் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.

நிலம் தயாரித்தல்:

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்து கொள்ள வேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 45 செ.மீ ஆழத்தில் குழகள் எடுக்கவேண்டும். பின்பு குழிகளில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி நாற்றுக்களை குழியின் மத்தியில் நடவேண்டும்.

விதையும் விதைப்பும்:

விதைப்பு:

ஒரு எக்டருக்கு 500 கிராம் விதைகள்

நாற்றாங்கால்:

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.

ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் விதைக்கவேண்டும். பிறகு பைகளை நிழல்படும் இட்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவேண்டும். நாற்றுக்கள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.

நீர் நிர்வாகம்:

வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்சவேண்டும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:

ஆண்பெண் செடிகளை நீக்கியவுடன் செடி ஒன்றிற்கு 50 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இரண்டு மாதத்திற்கு ஒர முறை கொடுக்கவேண்டும். மேலும் செடி ஒன்றிற்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா கொடுக்கவேண்டும். உரம் இட்ட பின் நீர்ப் பாய்ச்சவேண்டும்.

நுண்ணோட்டச் சத்து:

துத்தநாக சல்பேட் (0.5 %) + போரிக் அமிலம் (0.1 %) கலவையினை நடவு செய்த 4வது மற்றும் 8வது மாதத்தில் தெளிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கின்றது.

பின்செய் நேர்த்தி:

செடிகள் பூக்க ஆரம்பிக்கும் போது, 15 முதல் 20 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியைவிடவேண்டும். ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு விட்டு இதர ஆண், பெண் செடிகளை நீக்கவேண்டும்.

கோ.3 மற்றும் கோ.7 போன்ற இருபால் இரகங்களில் இருபால் பூக்கள் கொண்ட மரங்களை மட்டும் வைத்துக்கொண்டு,பெண் மரங்களை நீக்கிவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு:

நூற்புழு:

நாற்றாங்காலில் நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஒரு பாலித்தீன் பையில் ஒரு கிராம் கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்தை இடவேண்டும்.

வேர் அழுகல் நோய்:

செடியின் மேல் பாகத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கி நின்றால் இந்நோய் பரவும். இந்நோய் தாக்கிய செடிகள் வாடி இறந்துவிடும்.

கட்டுப்பாடு:

இதனைக் கட்டுப்படுத்த 0.1 சத போர்டோக் கலவை அல்லது 0.2 மயில்துத்ததம் கரைசலை வேர்கள் நனையுமாறு ஊற்றவேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 4 முறை உபயோகிக்கவேண்டும்.

அறுவடை:

பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக வரும் போது அறுவடை செய்யவேண்டும்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories