பப்பாளி சாகுபடி

பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் பூமி சாகுபடி செய்ய ஏற்றது அல்ல.

விதை அளவு

ஒருஒரு எக்டருக்கு நடவு செய்ய 500 கிராம் விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோவிதைக்கு இரண்டு கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நிலம் தயாரித்தல்
நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்யவேண்டும் .பிறகு 1.5 மீட்டர் இடைவெளியில் 45 சென்டிமீட்டர் நீளம் 45 சென்டிமீட்டர்அகலம் மற்றும் 45 சென்டிமீட்டர் ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும் .குழிகளில் மண் மற்றும் தொழு உரம் இட்டு நீர் ஊற்றி ஆற விட வேண்டும்.

விதைத்தல்
தயார் செய்துள்ளகு ழிகளில் நாற்றுக்களை மையப்பகுதியில் நட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும் .செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories