ரகங்கள்
கோ-1, கோ-2, கோ-3 ,கோ4 ,கோ5,கோ6 மற்றும் சூரியா ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்களில் நடவிற்கு மிகவும் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.
மண்
பப்பாளி பல வகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. களிமண் பூமி சாகுபடி செய்ய ஏற்றதல்ல.
விதை அளவு
1 கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றங்கால் தயாரித்தல்
நேர்த்தி செய்த விதைகளை தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி பாலித்தீன் பைகளில் ஒரு சென்டிமீட்டர் ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம் .பிறகு பைகளையும் நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு நீர் ஊற்ற வேண்டும் .நாற்றுக்கள் 60 நாட்களில் தயாராகிவிடும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்யவேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில், 45சென்டி மீட்டர் நீளம், 45 சென்டிமீட்டர் அகலம் ,மற்றும் 45 சென்டிமீட்டர் ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் மண் மற்றும் தொழு உரம் இட்டு நீர் ஊற்றி ஆற விட வேண்டும்.
விதைத்தல்
தயார் செய்துள்ள குழிகளில் நாற்றுகளைமையப் பகுதியில் நட்டுநீர்ப்பாய்ச்சவேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும் .பிறகு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது .செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உரங்கள்
நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கியுள்ளன 150 கிலோ உரத்தைக் கொடுக்க வேண்டும்.
செடி ஒன்று 20 கிரம் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா கொடுக்கவேண்டும்.உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
துத்தநாக சல்பேட் 0.5 சதவீதம் போரிக் அமிலம் 0.1% நடவு செய்தநான்காவது மற்றும் 8வது மாதத்தில் தெளிப்பான் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.
பயன்கள்
பப்பாளிக் காயை கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
பப்பாளிப் பாலை பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வந்தால் புண்கள் குணமாகும்.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும் சிறுநீர்ப்பையில் உள்ள கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும்.
பப்பாளிக்காயைசாரு அரைத்துக் குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.