பாகற்காய் சாகுபடி முறைகள்!

 

மல்லிகையில் வளரும் மொட்டு புழுவை எப்படி இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது?

மல்லிகை மகசூலை பாதிக்கிற விஷயம் என்றால் மொட்டுப் புழு மட்டும்தான்.

இந்தப் புழுக்கள் இளம் மொட்டுகளை தாக்கிப் பலத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

இயற்கை வழி விவசாயிகள் மூலிகை பூச்சி விரட்டியை தெளித்து மல்லிகை மொட்டு புழுவை கட்டுப்படுத்தலாம்.

எருக்கன் பயன்கள் என்ன?

கத்திரிப்பூ நிற [நீலம்] எருக்கம் செடி, அதற்கடுத்து வெள்ளெருக்கு செடி அதிகம் காணப்படும்.

எருக்கம் நார் உறுதியானது என்பதால் அதிகமாக வில்லின் நான் ,மீன் வலை ,முறுக்கு நூல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

எருக்கம் பூ மருத்துவ குணம் கொண்டதாக உள்ளதால் சித்த மருத்துவத்தில் சளி ,இருமல், மூச்சிரைப்பு போன்ற நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.

இயற்கை விவசாயத்தில் மூலிகை பூச்சி விரட்டிகளில் இதன் இலையை சேர்க்கப்படுகிறது.

பாகற்காய் செடிக்கு எதில் பந்தல் அமைப்பது? என்ன ஊடுபயிர் செய்யலாம்?

விவசாயிகள் தங்களின் வசதிக்கேற்ப சவு க்கு பந்தல், மூங்கில் பந்தல், நைலான் ஒயர் பந்தல், கல் நடவு செய்து பந்தல் அமைக்க வேண்டும்.இப்படி பந்தல் அமைத்தால் அதை ஐந்து வருடங்கள் வரை உபயோகிக்கலாம்.

ஆரம்பத்திலேயே ஊடுபயிராக உளுந்து, பச்சைப் பயறு சாகுபடி செய்யும்போது அஸ்வினி பூச்சியின் தாக்குதலை குறைக்கலாம். 70 நாட்கள் உளுந்தை அறுவடை செய்த பின்னர்தான் பாகல் செடிகள் கொடிகள் பந்தலில் படர ஆரம்பிக்கும்.

தீவனப்பயிர் விதைகளை நேர்த்தி செய்வது எப்படி?

விதைகளை 800 சென்டிகிரேடு வெப்பநிலை வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் விட்டு பிறகு குளிர்ந்த நீரில் 1o மணிநேரம் ஊறவைத்து அதன் பிறகு உலர வைத்து விதைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.

கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு இயற்கை கசாயம் எப்படி செய்வது?

குப்பைமேனி இலை, கீழாநெல்லி இலை, வேப்பிலை ,கொய்யா இலை( குடல் கிருமிகளை வெளியேற்ற த லா ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் மஞ்சள் தூள் ,சீரகம், மிளகு,வெந்தயம் தலா 10 கிராம் ஆகிய அனைத்தையும் எடுத்து 3 லிட்டர் தண்ணீரில் கலந்து சுண்டக் காய்ச்சி கஷாயம் ஆனதும் அவற்றை 10 லிட்டர் நீரில் கலந்து காலை மாலை என இரண்டு வேளையும் கொடுக்கக் கொடுக்க வேண்டும்.

இவற்றை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை கோழிகளுக்கு கொடுக்க எதிர்ப்பு சக்தி உண்டாகும்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories