பாலக்கீரையை பயிர் இடுவது எப்படி?

பருவம்
இக்கீரையைப் பயிர் செய்ய சித்திரை ,ஆடி ,மார்கழி, மாசி பட்டங்கள் ஏற்றவை.

மண்

பாலக்கீரை வளர வளமான மண் தேவை .வண்டல் மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

விதை அளவு

ஒரு எக்டர் ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

தேர்வு செய்த நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் நான்கு தளங்களில் பரவலாகக் கொட்டி கவாத்து செய்து இம்மன்னை சமன்படுத்தி கொள்ள வேண்டும். என்றென்றும் நீர் பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு 18 அங்குலம் இடைவெளி இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதைத்தல்

பக்கவாட்டில் 1.5 அங்குல ஆழத்தில் விதைகளை 8 அங்குலம் முதல் 12 அங்குலம் இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதை விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது .ஆனால் ஈரப்பதம் காயாமல் இருந்து கொண்டே இருக்கவும். இதற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இதனால் நோய்த் தாக்கம் குறைந்து கீரைகளின் வளர்ச்சிசீராக இருக்கும்.

பயன்கள்

விட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.

போலிக் அமிலம் அதிக அளவில் உள்ளதால் கர்ப்பிணிகள் இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் நல்லது. குழந்தைகளுக்கு அள்ளிக் கொடுக்கும் தாய்மார்களும் பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவி செய்கிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories