பி.பி.டி 5204க்கு பதிலாக மாற்று நெல் ரகங்கள் பயன்படுத்தலாம்.

பி.பி.டி 5204க்கு பதிலாக மாற்று நெல் ரகங்கள் பயன்படுத்தலாம்.

அதிகமாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் பி.பி.டி.5204 (BPT 5204) நெல் இரகத்தை சாகுபடி செய்வதைத் தவிர்க்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரத்தில் டி.கே.எம்.13 உள்ளிட்ட மாற்று இரகங்களை பயிரிடுமாறு புதுக்கோட்டை வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கா.காளிமுத்து கூறுகையில்,

ஆந்திரா பொன்னி (Andhra Ponni)
ஆந்திரா பொன்னி, சம்பா மசூரி என்று அழைக்கப்படும் பி.பி.டி.5204 நெல் இரகமானது ஆந்திர அரசின் பாபட்லா வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தால் 1986ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

சராசரி மகசூல் (Average yield)
இந்த இரகம் விரும்பத்தக்க சமையல் பண்புகளை கொண்டிருப்பதாலும், பயிர் நோய்களால் எளிதில் பாதிக்கப்படுவதால் சராசரி மகசூலைப் பெறுவதே கடினமாக உள்ளது.

விவசாயிகள் பி.பி.டி.5204 இரகத்திற்கு நல்ல விலை கிடைப்பதாக கருதுகின்றனர்.

ஆனால், எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆட்படுவதால் ஏற்படும் மகசூல் இழப்பு, அதிகப்படியான பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதனை ஆராயும்போது, நிகர வருமானம் குறைவாகவே இருக்கிறது. நெற்கதிரின் கழுத்தில் ஏற்படும் கழுத்து குலை நோய் கதிர் மணிகளை பதறாக்கி கடும் மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.

பலன் இல்லை (No benefit)
பி.பி.டி.5204 இரகம் கழுத்து குலை நோயால் பாதிக்கப்பட்டால், எளிதில் குலை நோய் தாக்குதலுக்கு ஆட்படும் ரகத்தின் இயல்புடன் கதிர் வெளிவந்த நிலையில், நோய் பரவுவதற்கு ஏதுவான வானிலையும் (நவம்பர் – டிசம்பர்) நிலவும்போது, நோயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரிதாக பலன் அளிப்பதில்லை.

TKM-13
இதனால் 70%-க்கு மேல் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த நெல் ரகத்துக்கு மாற்றாக, தமிழக அரசின் திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 2015ம் ஆண்டு டி.கே.எம். 13 (TKM-13) என்ற நெல் ரகம் வெளியிடப்பட்டுள்ளது.
டி.கே.எம்.13 மத்திய சன்ன வெள்ளை அரிசியை உடையது. பி.பி.டி.5204-ஐ போன்ற விரும்பத்தக்க சமையல் பண்புகளை கொண்டுள்ளது எனவே

நோய் எதிர்ப்புத் திறன் (Immunity)
குலை நோய், செம்புள்ளி நோய் மற்றும் இலை அழுகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையதாக உள்ளது. ஒரு ஏக்கருக்கு 2300 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. நல்ல அரவைத்திறனும், முழு அரிசி காணும் திறனும், ஒட்டாத சாதத்தன்மை கொண்டது.

எனவே விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில், சம்பா பருவத்திற்கேற்ற (ஆகஸ்ட்) நீண்டகால இரகமான சி.ஆர்.1009 சப் 1, பின்-சம்பா பருவத்திற்கேற்ற (செப்டம்பர் – அக்டோபர்) மத்திய கால இரகங்களான டி.கே.எம்.13, ஏ.டி.டி.39 (கல்சர்) ஆகியவற்றை பயிரிடலாம். இவ்வாறு அவர் ஆலோசனை வழங்கி உள்ளார் மற்றும்

அதேநேரத்தில் அரிமளம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் சி.ஆர்.1009 சப்-1 – 3000 கிலோ, டி.கே.எம்.13 7640 கிலோ, எ.டி.10.39 2400 கிலோ இருப்பு உள்ளது. எனவே விவசாயிகள் இந்த ரகங்களை வாங்கிக் பயன்படுத்திப் பயனடைய வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories