நிலத்தில் ஈரம் காயாமல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.
மூன்று பாசனத்துக்கு ஒரு முறை 10 கிலோ கடலைப் பிண்ணாக்கை கரைத்து பாசன நீருடன் கலந்து விட்டால் செடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
செங்கரும்புக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம்?
செங்கரும்பு சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் சிறந்தது. சொட்டுநீர் பாசன அமைப்பதினால் உரக் கரைசலை பயன்படுத்துவது எளிதாகிறது.
ஒவ்வொரு முறை களை எடுத்த பிறகும் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை சொட்டு நீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
தெ ன்னையில் காய்கறி மற்றும் தீவனப் பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம்?
தென்னையில் ஊடுபயிராக எலுமிச்சை, கருவேப்பிலை, வாழை ,சேப்பங்கிழங்கு, மிளகாய் போன்ற பயிர்களை பயிரிடலாம்.
நடவு செய்த 3 முதல் 4 வருடங்கள் வரை மரவள்ளி கிழங்கு அல்லது தானியங்கள் பயிரிடலாம்.
தென்னையில் ஏழு முதல் 20 வருடங்கள் வரை பசுந்தாள் உரப் பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்கள் ஆன நேப்பியர் புல் மற்றும் கினியா புல் போன்றவற்றை சாகுபடி செய்யலாம்.
குறைந்த நிலத்தில் கீரை சாகுபடி செய்யலாம்? ஒவ்வொரு வகையான கீரைக்கும் எவ்வளவுவிதை மற்றும் இட அளவு தேவைப்படும்?
குறைந்த நிலத்திலும் கீரை சாகுபடி செய்யலாம். கீரை விதைகளை மணலோடு கலந்து பரவலாக தூவ வேண்டும்.
.
அந்த வகை 30 சென்ட் நிலத்திற்கு ஒரு கிலோ அரைக்கீரை விதை, 30 சென்ட் நிலத்திற்கு ஒன்றரை கிலோ முளைக்கீரை விதை, 5 சென்ட் நிலத்திற்கு 100 கிராம் மணத்தக்காளி விதை, 10 சென்ட் நிலத்திற்கு கால் கிலோ விதை பசலி விதை, 5 சென்ட் நிலத்திற்கு அரை கிலோ புளிச்ச கீரை விதை, 10 சென்ட் நிலத்திற்கு அரைக்கீரை சிறு கீரை விதை தேவைப்படும்.
ஆடுகளுக்கு பருத்திச் செடிகளை எப்படி தீவனமாக அளிக்க வேண்டும்?
பருத்தியில் இருந்து கிடைக்கும் பருத்திக்கொட்டை பிண்ணாக்கு போன்ற கழிவுகளில் புரதச்சத்து 16.1 சதம் உள்ளதால் இதை தீவனமாக பயன்படுத்தலாம்.
பருத்தி செடியின் இலைகள் தண்டுகள் மற்றும் பருத்தி ஓடுகள் ஆகியவற்றை வெயிலில் காய வைத்து உலர்த்தி அரைத்து தீவனங்களில் 20 முதல் 25 சதம் வரை கலந்து கொடுக்கலாம்.