பூங்கார் அரிசியின் தனித்துவம் :

பூங்கார் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நெல் வகைகளில் குறுகிய காலப் பயிராகும். ஆண்டின் எல்லாப் பருவங்களுக்கும் பயிர்ச் செய்ய ஏற்றதான இவ்வகை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகையிலும், ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடிச் செய்யக்கூடிய இரகமாகும். பாரம்பரிய நெல் வகைகளில் மாறுபட்ட இரகமான இந்த பூங்கார் நெல், நாற்பது நாட்களுக்கு விதை உறக்கத்தில் இருந்து, அதற்குப் பிறகே முளைக்கக்கூடிய திறன்கொண்டதாகும்.

நடுத்தரமான இந்த நெல் இரகம், நடவுச் செய்யவும், நேரடி விதைப்புக்கும் ஏற்றதாகும். சிவந்து காணப்படும் இதன் நெற்பயிர் அரிசியும் சிவப்பாகவே உள்ளது. இதன் வயது எழுபது நாட்கள் என்றாலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யும்போது எழுபதிலிருந்து தொண்ணூறு நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது.

தனித்துவம் :

* பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத் (Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச் செய்த நாற்றங்கால் வயலில் பத்து நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருப்பினும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிக்கப்படுவதில்லை என்றார் .

* இதன் நெற்கதிர் மூப்படைந்த அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும், மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில், நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும், அது முளைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

* மேலும், வரப்புக் குடைஞ்சான், குழியடித்தான் போன்ற பாரம்பரிய நெல் வகைகளைவிட, பெரும் வறட்சியைத் தாங்கும் தன்மைக் கொண்டதாக கருதப்படுகிறது என்றார் .

பூங்கார் அரிசி உண்பதால் ஏற்படும் பயன்கள் :

* உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

* மருத்துவக் குணம் (Medicinal nature) கொண்ட இந்த இரக அரிசியை மகப்பேறு காலங்களில் (Maternity) சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமும் நோய் எதிர்ப்புச் (Immune) சக்தியும் கிடைப்பதுடன் மருத்துவச் செலவும் குறையும் என்றார்.

* தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் (Healthy Baby) ஆரோக்கியமாக இருக்கும்.

* குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் (Mother’s Milk) நன்கு சுரக்கும். தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்.

* உடம்பிற்கு வலிமை (Body Strength) தரும்.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories