மணிலாவில் சுருள் பூச்சி மற்றும் புரோட்டீன் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
இதற்கு மருந்துகளைத் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சுருள் பூச்சியை கட்டுப்படுத்த விதைப்பின் போது குறிப்பிட்ட இடைவெளியில் ஓர் வரிசை கம்பு விதைக்க வேண்டும்.
ப்ரோட்டினியாவை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கு சாகுபடி செய்யலாம்.
உருளைக்கிழங்கை இந்த மாதத்தில் பயிரிடலாம்?
உருளைகிழங்கை இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப பயிர் செய்யலாம்.
அந்தவகையில் கோடைகாலம்: மார்ச் -ஏப்ரல் இலையுதிர்காலம் ஆகஸ்ட்- செப்டம்பர் பாசனம் ஜனவரி- பிப்ரவரி சமவெளிப் பகுதி: அக்டோபர்- நவம்பர் ஆகிய மாதங்களில் பயிரிடலாம்.
பெரிய நெல்லி மரத்தை எப்பொழுது கவாத்து செய்ய வேண்டும்?
ஜனவரியில் பூத்தால் ஏப்ரல் வரை காய்கள் கிடைக்கும் .ஒவ்வொரு மகசூல் முடிந்ததும் கவாத்து செய்து உரம் வைக்க வேண்டும்.
தட்கல் முறையில் மின் இணைப்பு பெற யாரை அணுக வேண்டும்?
மின் இணைப்பு கோரி விண்ணப்பம் பதிவு செய்துள்ள விவசாயிகளும் இந்த முறை மூலம் 6 மாத காலத்திற்குள் இலவச மின் இணைப்பு பெறலாம்.
இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் இடம் கடிதம் கொடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடைகளினால் என்ன பயன்?
கால்நடைக் கழிவுகள் ஆன சாணம் மற்றும் கோமியத்தை பண்ணைக்குட்டைகள் சேகரித்து பிறகு திரவ வடிவில் பயிர்களுக்கு நேரடியாக பாசனம் மூலம் வழங்கலாம்.
சாண எரிவாயு கலன்களிலிருந்து பெறப்படும் கழிவானது நேரடியாக பாசன கால்வாய்கள் மூலம் பயிர்களுக்கு அளிக்கப்படுவதால் அதிக மகசூல் பெறலாம்.