தரமான ஒரே அளவில் உள்ள மஞ்சளையும் விதைக்கு தேர்வு செய்ய வேண்டும். வேறு நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளில் விதை தேர்வு செய்தல் சிறந்தது.
மஞ்சள் சாகுபடியில் ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ விதை தேவைப்படும்.
வேர்க்கடலை சாகுபடி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
விதைகளை விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும். வேர்க்கடலையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஊடுபயிராக ஆமணக்கு ,துவரை உளுந்து, தட்டைபயிறு பயிரிடலாம். களைகளை நீக்க வேண்டும்.
பஞ்சகாவ்யா கரைசலை வாரம் ஒரு முறை தெளிக்கலாம். இதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும்.