மணிலாவில் அதிக இலாபம் ஈட்ட என்ன செய்ய வேண்டும்!

பொதுவாகக் கார்த்திகைப் பட்டத்தில் மணிலா விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் இரட்டிப்பு இலாபம் பெறலாம் என விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் க.கதிரேசன் தெரிவித்தார்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மணிலா கார்த்திகை பட்டத்தில் அதிகளவில் விதைக்கப்படுகிறது. எனவே, இந்தப்பட்டத்தில் மணிலா விதைப்பண்ணை அமைத்து அதிக இலாபம் பெறலாம் என்றார்.

ரகங்கள் (Varieties)
மணிலாப் பயிரில் விதைப்பண்ணை அமைக்க தரணி, கதிரி-6, கதிரி-9, டிஎம்வி 14. ஜிஜேஜி 31. ஜிஜேஜி 9. ரகங்களில் ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகள் உள்ளன இதில்

விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்களை அணுகி மானிய விலையில் விதைகளைப் பெற்று விதைப் பண்ணை அமைக்கலாம் எனவே

வழிமுறைகள் (Instructions)
விதைகளை விதைப்பதற்கு முன் மணிலா ரைசோபியம் நுண்ணு யிர் பாக்கெட்டை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்திய பின் விதைக்கவும் மற்றும்

விதைத்த 30 நாட்களுக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி விதைப்பண்ணையை பதிவு கட்டணமாக ரூ.25 (ஒரு விதைப்பு அறிக்கை) வயல் ஆய்வுக் கட்டணமாக ரூ.50 ஒரு ஏக்கருக்கு) பரிசோதனை கட்டணமாக ரூ.30 ஒரு விதைப்பு அறிக்கை) என்ற செலுத்த வேண்டும்.

வயல் ஆய்வு (Field study)
விதைச்சான்று அலவலர்கள் விதைத்த 60து நாள் மற்றும் 90வது நாள் என 2 முறை வயலில் ஆய்வு செய்வார்கள்.

3வதாக 135 நாட்களுக்குள் மணிலா விதைக் குவியலை ஆய்வு செய்வார்கள்.
இந்த வயல் ஆய்வின் போது பிற ரக கலவன்கள் ஏதாவது இருந்தால் அதனை அப்புறப்படுத்தச் சொல்வார்கள்.

மணிலாப் பயிருக்கு அடியுரமாக ஜிப்சம் எக்கருக்கு 80 கிலோவும், விதைத்த 45து நாள் மேலுரமாக 80 கிலோ என மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். இதனால் திரட்சியான காய்கள் பிடித்து அதிக மகசூல் கிடைக்கும் என்றார்.

இரட்டிப்பு லாபம் (Double profit)
மேலும் தகுதியான விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அரசு வழங்குவதால் விதைப்பண்மை விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories