மருத்துவ குணமிக்க வெள்ளரி சாகுபடியை பற்றி தெரிந்து கொள்ள இதை வாசியுங்கள்…

உணவே மருந்து என்ற தத்துவத்துக்கு வெள்ளரி உன்னத எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. 95 சதவீத நீர்ச் சத்துடன், சாதாரண நீரைவிடச் சத்து மிகுந்த நீரை கொண்டிருப்பதால் உடல் வெப்பநிலையையும், நீர்ச்சத்தையும் சீராகப் பராமரித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

இதிலுள்ள வைட்டமின்களும், மாங்கனீஸ், பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தாதுக்கள் தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.

இதில் உள்ள லேரிசிரிசினால், பினோரெசினால், சீகோஐசோசிரிசினால் என்ற 3 லிக்னன்கள் பலவகையான புற்றுநோய்கள் வரும் வாய்ப்பைத் தடுக்கின்றன.

வெள்ளரிச் சாற்றில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியவை ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.

வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல் ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது. ஜீரண மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அமிலத் தன்மை, நெஞ்செரிச்சல், குடல்புண் ஆகியவற்றைக் குணமாக்கி சீரான ஜீரணத்துக்கு உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

மருத்துவ குணமிக்க வெள்ளரி சாகுபடி பற்றி இங்கு காண்போம்…

ரகங்கள்

கோ 1, ஜாப்பனிஸ் லாங் கிரீன், ஸ்டெரெய்ட் எய்ட், பாயிண்ட் செட்டி.

மண் மற்றும் பருவநிலை

வடிகால் வசதியுள்ள, அங்ககச் சத்து நிறைந்த மணல்சாரி வண்டல் மண் மிகவும் ஏற்றது. ஜூன் மாதமும், ஜனவரி முதல் ஏப்ரல் முடிய நான்கு மாதங்களும் விதைப்பதற்கு மிகவும் ஏற்ற காலம்.

விதைப்பு:

நிலத்தை நான்கு முறை நன்கு உழ வேண்டும். 5 அடி இடைவெளியில் நீளமான கால்வாய்கள் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் உயிர்ப் பூசணக் கொல்லிகளையோ அல்லது 2 கிராம் கார்பண்டசிம் என்ற ரசாயன பூசணக் கொல்லியையோ கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

கால்வாயின் பக்கவாட்டில் 2 அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். விதைகளை ஊன்றுமுன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின் வாரத்துக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

உரமிடுதல்:

ஏக்கருக்கு 16 மெட்ரிக் டன் தொழு உரத்தை அடியுரமாக இடவேண்டும். பின் விதைத்த 30ஆம் நாள் ஏக்கருக்கு 14 கிலோ தழைச்சத்து தரவல்ல 30 கிலோ யூரியாவை மேலுரமாக இடவேண்டும்.

பின்செய் நேர்த்தி:

இரண்டு அல்லது மூன்று முறை களைக்கொத்து கொண்டு களையெடுக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு மற்றும் பழ ஈ கட்டுப்பாட்டு முறைகள்:

1. பாதிக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும்.

2. இந்த பழ ஈக்களின் எண்ணிக்கை வெப்பமான நாள்களில் குறைவாகவும், மழை நாள்களில் அதிகபட்சமாகவும் இருக்கும். எனவே மழைக் காலங்களில் காய்ப்பருவம் வராத வகையில் விதைப்பு தேதியை நிர்ணயித்து விதைப்பு செய்ய வேண்டும்.

3. நன்கு உழவு செய்து கூட்டுப் புழுக்களை அழிப்பதன் மூலம் பழ ஈ தாக்குதலைக் குறைக்கலாம்.

கருவாட்டுப் பொறி:

ஒரு பாலித்தீன் பையில் 5 கிராம் நனைந்த கருவாடு, ஒரு மிலி டைகுளோர்வாûஸ பஞ்சில் நனைத்து வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். நனைந்த கருவாட்டை 20 நாள்களுக்கு ஒருமுறையும், டைகுளோர்வாஸ் நனைத்து வைத்த பஞ்சை வாரம் ஒருமுறையும் மாற்ற வேண்டும்.

சாம்பல் நோய்:

இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு அரை கிராம் டினோகாப் அல்லது கார்பண்டசிம் கலந்து தெளிக்க வேண்டும்.

எச்சரிக்கை:

வெள்ளரிக்கு நச்சாகிப் பயிருக்குத் தீங்கு செய்யும் என்பதால் லிண்டேன் 1.3 சதத்தூள், தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

மகசூல்:

80 முதல் 90 நாள்களில் ஏக்கருக்கு 4 ஆயிரம் கிலோ வரை மகசூல் எடுக்கலாம். எனவே வெள்ளரி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் உரிய பருவங்களில் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து நல்ல லாபம் பெறலாம்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories