உரங்கள்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மண்புழு உரம் வைக்க வேண்டும். மூன்று மாதத்திலிருந்து வாரம் ஒரு முறையும் நீர்ப் பாசனத்துடன் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து கொடுக்க வேண்டும்.
ரசாயன உரமாக இருந்தல் செடி ஒன்றுக்கு முதல் வருடம் 10 கிலோ தொழு உரம், 200 கிராம் தழைச்சத்து, 100 கிராம் மணிச்சத்து, 400 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட வேண்டும். 2 முதல் 5 வருடம் வரை 20 கிலோ
தொழு உரம் 400 கிராம் தழைச்சத்து 250 கிராம் மணிச்சத்து 800 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட வேண்டும். ஆறு வருடங்களுக்கு பிறகு 30 கிலோ தொழு உரம், ஒரு 600 கிராம் தழைச்சத்து, 500 கிராம் மணிச்சத்து, 1,200 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட வேண்டும்.
ஆறு மாதங்களில் செடிகளில் பூ எடுக்கத் தொடங்கும் ஆனால் அந்த பூக்களையே உத்தரவிட வேண்டும் .குறைந்தது 24 மாதங்கள் முடிந்த பிறகே காய்ப்புக்கு விட வேண்டும் .அதற்கு முன்பாக காய் வி ட்டால் செடியின் வளர்ச்சி தடைபடும்.
பயன்
மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும் அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
மாதுளம் பழங்கள் தொண்டை, நுரையீரல் மற்றும் குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
இது ஒரு ஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை ஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.
மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சோகை நோயை தடுக்கவும் ,மாதுளம் பழங்கள் உதவுகின்றன.
இந்த சாற்றுடன் இஞ்சிச் சாற்றையும் சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.
இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும் ,மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.