முட்டைகோஸ் சாகுபடி முறை

 

தொட்டிகள்

10 கிலோ கொள்ளளவு கொண்ட தொட்டி அல்லது பைகளில் 8 கிலோ வரை மணல், தென்னை நார்க்கழிவு, மக்கிய குப்பை ஆகியவற்றை நிரப்பி தொட்டியை ஆறவிட வேண்டும் .நாற்றுகளை உண்டாக்கக்கூடியது தென்னை நார் கழிவுகளை நிரப்பவேண்டும். அதனடியில் ஒரு துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

விதைத்தல்
தரமான விதைகளை தேர்வு செய்து குழித்தட்டுகளில் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்கவேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும் .தொட்டிகளில் 20 நாள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்
நாற்று நட்ட உடனே நீரூற்ற வேண்டும் .இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்
பஞ்சகாவியா உரத்தையும் நீர் தெளிப்பான் ஆக தெளிக்கலாம். மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம். இயற்கை பூச்சி விரட்டி கரைசலான பூண்டு கரைசல் ,கற்றாழைச் சாறு ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி தெளித்து நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
அறுவடை
120 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories