பருவம்
ஜூன் டிசம்பர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவமாகும்.
மண்
நல்ல வடிகால் வசதி கொண்ட மணற் பாங்கான செம்மண் நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழையளவு 50 முதல் 250 சென்டிமீட்டர் வரை உள்ள இடங்களில் நன்கு வளரும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை அல்லது மூன்று முறை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் அந்தபயன்படுத்த வேண்டும். பிறகு45 சென்டிமீட்டர் நீளம் ,அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் இடையே உள்ள இடைவெளியில் 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழியிலும் மேல் மன் 2 கிலோ தொழு உரம் 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
விதை அளவு
ஒட்டு கட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் நடவு செய்வதற்கு 200 கன்றுகள் தேவைப்படும்.
விதைத்தல்
தயார் செய்துள்ள குழிகளில் கன்றுகளை குழியின்மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும் .அடர் நடவு முறையில் 5×4 மீட்டர் இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 500 மரங்கள் வீதம் நடவு செய்யலாம்.
நீர் நிர்வாகம்
ஓரளவிற்கு வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் .பூக்கும் தருணத்திலும் காய்க்கும் தருணத்திலும் வறட்சியான சீதோஷ்ண நிலையிலும் நிலவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும். முந்திரியை பொதுவாக மானாவாரி பயிர் செய்யலாம்.